அண்மைய செய்திகள்

recent
-

உலகின் சிறந்த விளையாட்டு வீரராக நோவக் ஜோகோவிச், வீராங்கனையாக செரீனா தெரிவு!


உலகின் சிறந்த விளையாட்டு வீரராக நோவக் ஜோகோவிச்சும், வீராங்கனையாக செரீனா வில்லியஸ்சும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

17-வது லாரெஸ் விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.

இதில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இந்த ஆண்டுக்கான லாரெஸ் சிறந்த வீரருக்கான விருதைதட்டிச் சென்றார். இவர் ஏற்கனவே 2012, 2015-ம் ஆண்டுகளிலும் இந்த விருதை பெற்றிருக்கிறார்.

இதே போல் கடந்த ஆண்டு 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதோடு டென்னிஸ் உலகில் ‘நம்பர் ஒன்’ ராணியாக வலம் வரும் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சிறந்த வீராங்கனையாக தெரிவாகியுள்ளார், அவர் இந்த விருதை பெறுவது இது 3-வது முறையாகும்.

உலகின் சிறந்த விளையாட்டு வீரராக நோவக் ஜோகோவிச், வீராங்கனையாக செரீனா தெரிவு! Reviewed by Author on April 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.