மன்னார் பிரதான பாலத்தை அண்டிய சுற்றுலாத் தளத்தை பாதுகாக்க கோரிக்கை...
சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாறிவரும் மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மண் திட்டி கடல் அரிப்பினால் அழிவடைந்து செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மண் திட்டியினை மன்னார் மக்கள் உள்ளிட்ட வெளியூர் உல்லாச பயணிகளும் மாலை நேரங்களில் பொழுதை களிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
மன்னாரை பொறுத்தமட்டில் சுற்றுலாதளங்கள் மிகக்குறைவானவே காணப்படுகிறது. இதனால் மன்னாரின் சுற்றுலாத்தளமாக குறித்தபகுதி மாறிவருகின்றது.
இவ்வாறானநிலையில் கடந்தகாலங்களில் அதனை சுற்றுலா தளமாக அமைப்தற்கு உள்ளூராட்சி மன்றங்கள் செயற்பட்டபோது முன்னாள் மன்னார் நகரசபையினால் முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டது.
அக்காலப்பகுதியில் பறவைகள் சரணாயலய பகுதியாக காணப்பட்டபோதிலும் மன்னார் நகரசபை அதனைமேற்பர்வை செய்துவந்துள்ளது.
எனினும் உள்ளுராட்சி மன்றங்களின் காலம் நிறைவடைந்த நிலையில் அதன் செயற்பாடுகள் தள்ளிபோடப்பட்டது.
இந்நிலையில் குறித்த மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மண் திட்டி கடல் அலையினால் அரிக்கப்பட்டு அழியும் நிலை உருவாகி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் நகர்புற மக்கள் பொழுதைகழிக்க பெரிதும் விருப்பத்துடன் செல்லும் குறித்த பகுதிக்கே சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியிலுள்ள மண்திட்டி கடலரிப்பினால் அழிவடைந்து வருவதால் சுற்றுலாத்துறை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் சுற்றுலாதளமாக மக்கள் விரும்பி செல்லும் குறித்த மண் திட்டியை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாத்துறை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்னார் பிரதான பாலத்தை அண்டிய சுற்றுலாத் தளத்தை பாதுகாக்க கோரிக்கை...
Reviewed by Author
on
April 20, 2016
Rating:

No comments:
Post a Comment