அண்மைய செய்திகள்

recent
-

பெண்கள் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் முதல் தடவை சாம்பியன்


டி20 உலகக்கோப்பை  கிரிக்கெட் சில நாட்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மூன்று மணிக்கு பெண்களுக்கான இறுதிப்போட்டி தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலிய அணிகள்  பலப்பரீட்சை நடத்தினார்கள். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க வீரர்களாக அலிசா ஹீலியும், விலானியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹீலி 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து லேனிங் களம் இறங்கினார். இவர் விலானியுடன் சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.

இருவரும் அரைசதம் கடந்து அவுட் ஆனார்கள். இருவரும் தலா 52 ரன்களில் அவுட் ஆக அடுத்து வந்த பெர்ரி 23 பந்தில் 28 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீசின் மேத்யூஸ் மற்றும் டெய்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இருவரும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இருவரின் ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை நோக்கி வீறுநடைபோட்டு வந்தது. இதற்கிடையில் இருவரும் அரைசதம் அடித்தனர்.

சிறப்பாக விளையாடிய மேத்யூஸ் 45 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து டெய்லருடன் டோட்டின் ஜோடி சேர்ந்தார்.

கடைசி மூன்று ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 6 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் 14 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டோட்டின் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இதனால் அந்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 11 ரன்கள் குவித்தது.

ஆகவே, கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மூன்று பந்தில் மூன்று ரன்கள் எடுத்து வெற்றி இலக்கான 149 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி முதல் உலகக்கோப்பையை வென்றுள்ளது.



பெண்கள் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் முதல் தடவை சாம்பியன் Reviewed by Author on April 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.