அண்மைய செய்திகள்

recent
-

நிர்வாண போஸ் தரவிருக்கும் கனேடிய பிரதமர்!


பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாண போஸ் தர ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முனைப்புடன் செயல்பட்டு வருபவர் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.

இந்நிலையில், பிரபல கே பத்திரிகையின் அட்டை படத்திற்காகவும், உடற் பிரச்சினைகள் மற்றும் விரை விதை புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிர்வாண புகைப்படத்திற்கு அவர் போஸ் தரவிருக்கிறார்.

பிரதமர் ட்ரூடோவின் நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை அந்த கே பத்திரிகை சிறப்பு பதிப்பாக வெளியிட முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்சி பொறுப்பேற்ற ஜஸ்டின் ட்ரூடோ தமது அமைச்சரவையில் ஆண்-பெண் இருபாலருக்கும் சம அளவு வாய்ப்பளித்துள்ளார்.

மேலும் கனடாவில் சமீபத்தில் நடைபெற்ற ஓரின ஆர்வலர்களின் அணிவகுப்பில் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து நிர்வாண புகைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.

உலகின் தலைசிறந்த புகைப்பட நிபுணர் ஒருவரை இதற்காக நியமித்துள்ளதாகவும், அடுத்த வாரத்தில் ஒரு நாள் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு பிரச்சாரத்தினை முன்னிட்டு நிர்வாண புகைப்பட கோரிக்கையை அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரித்தானியா பிரதமர் கேமரூன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜங்கரிடமும் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






நிர்வாண போஸ் தரவிருக்கும் கனேடிய பிரதமர்! Reviewed by Author on April 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.