அண்மைய செய்திகள்

recent
-

சாமுவேல்ஸ் அதிரடியில் மீண்டும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்.....


டி20 உலகக்கண்ண போட்டியில் 2வது முறையாக மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
டி20 உலகக்கிண்ண போட்டியில் இறுதி ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

துவக்க ஆட்டகாரர்களாக ஜேசன் ராய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினார்கள். கடந்த ஆட்டத்தில் அசத்திய ஜேசன் ராய் பத்திரி பந்தில் ஸ்டேம்பை பறிக்கொடுத்தார். அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான ஹெல்ஸ் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணி அதிர்ச்சியடைந்தது.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் மோர்கன் பத்திரி பந்தில் கேட்ச் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி கடும் பின்னடைவுக்கு உள்ளானது.

இதனை அடுத்து இங்கிலாந்தின் நச்சத்திர வீரர் ஜோ ரூட்டும், ஜோஸ் பட்லரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சுலைமான் பென் வீசிய ஓவரில் பட்லர் இரண்டு சிக்ஸ் அடித்து ஓட்ட விகித்ததை கூட்டினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பட்லர் 34 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பிராத்வெய்ட் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இதனால் அணியை காப்பாற்ற வேண்டிய முழு பொறுப்பும் ஜோ ரூட் மீது விழுந்தது. ஆனால் மோசமான ஒரு ஷாட்டை விளையாடி 54 ஓட்டங்களில் ஜோ ரூட் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகப்பட்சமாக ரூட் 54 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் பிராவோ, பிராத்வெயிட் ஆகியோர் 3 விக்கெட்களும், பத்திரி 2 விக்கெட்டும் விழ்த்தினார்கள்.

156 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கெய்ல் இரண்டு பந்துகளை மட்டும் சந்திருந்த நிலையில் ஜோ ரூட்டின் பந்து வீச்சில் ஸ்டாக்கிடம் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.

தொடர்ந்து சார்லஸ்(1) வெளியேற, அடுத்து வந்த சாமுவல்ஸ் நிதானத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்த போதும் சாமுவல்ஸ் அணியின் தேவையை புரிந்துகொண்டு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதில், சாமுவல்ஸ்(85), பிராவோ(25), பிராத்வெயிட்(34) ஓட்டங்களென விளாசி 19.4 ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணி 161 ஓட்டங்களை குவித்தது.

66 பந்துகளில் 85 ஓட்டங்களெடுத்த சாமுவெல்ஸ் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இதன்மூலம் 2வது முறையாக உலகக்கிண்ணத்தை வென்று மேற்கு இந்திய தீவுகள் அணி அசத்தியுள்ளது.




சாமுவேல்ஸ் அதிரடியில் மீண்டும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்..... Reviewed by Author on April 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.