வித்தியா படுகொலை வழக்கு! புலனாய்வுத் துறையினருக்கு நீதிபதி எச்சரிக்கை!
புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பேசப்படா த விடயங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கூறியமை தொடர்பாக குற்றப் புலனாய்வு துறை பொலிஸாரை, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி வை.எம்.எம்.றியால் எச்சரித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அ திபரிடம் விளக்கம் கேட்கப்போவதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.
இன்றைய தினம் இவ் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிவான் அவ் அதிகாரியை மிக கடுமையாக எச்சரித்திருந்தார்.
மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் தொடர்பில் புங்குடுதீவு நீதிவான் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் இவ் வழக்கில் நேரில் பார்த்த சாட்சியம் மற்றும் இக்குற்றச்சாட்டோடு தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தினடிப்படையில் கைது செய்யப்பட்ட 11ஆம் 12ஆம் சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு விசாரணை, கடந்த 20ஆம் திகதி மன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்து.
இதன் போது நீதிவான் குறித்த வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் முன்னர் தப்பிச் சென்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குற்றபுலனாய்வு அதிகாரி இவ் வழக்கு தொடர்பில் குறித்த ஒர் நபரின் பெயரை குறிப்பிட்டு அவரை கைது செய்ய நீதிவான் உத்தரவிட்டிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே நேற்றைய வழக்கு விசாரணையின் போது தாம் அவ்வாறு தெரிவித்தேனா என கடும் தொணியில் குற்றப்புலனாய்வு அதிகாரியிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
அத்துடன் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிடக் கூடாது எனவும் நீதிவான் மிக கடுமையாக குறித்த குற்றப்புலனாய்வு அதிகாரிக்கு எச்சரித்திருந்தார்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரின் மனைவியாருடன் குற்றப்புலனாய்வு அதிகாரி பேசியிருந்தமை தொடர்பிலும் நீதிவான் குறித்த குற்றப்புலனாய்வு அதிகரியிடம் வினவியிருந்ததர்.
அத்துடன் குற்றப்புலனாய்வு அதிகாரியுடைய இத்தகைய செயற்பாடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கையினுடாக விளக்கம் கோருவேன் எனவும் நீதிவான் தெரிவித்தார்.
வித்தியா படுகொலை வழக்கு! புலனாய்வுத் துறையினருக்கு நீதிபதி எச்சரிக்கை!
Reviewed by Author
on
April 26, 2016
Rating:

No comments:
Post a Comment