வட மாகாண கல்வித்துறையின் அபிவிருத்திக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை!
வட மாகாணத்தின் கல்வித்துறையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான கலந்துரையாடல் இன்று கல்வி அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்தரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் கல்வி வலயங்களை விசேட கல்வி அபிவிருத்தி வலயங்களாக மாற்றி அபிவிருத்தி செய்யுமாறு கூறியதற்கு அமைவாக அனைத்து பாடசாலைகளின் குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இதேவேளை, வட மாகாணத்தில் நிலவும் ஆசிரியர், அதிபர் மற்றும் கல்வி அதிகாரிகளின் குறைபாடுகள், தொண்டர் ஆசிரியர் நியமனம் உட்பட அனைத்து ஆளணி குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், கல்வி அமைச்சின் புதிய திட்டமான நவீன மலசலகூடம் மற்றும் நீர் வசதிகள் மாகாண பாடசாலைகளுக்கும் வழங்குதல், தரம் 4, 5, 10, 11ஆம் வகுப்புகளுக்கு தளபாட விநியோகம் போன்ற தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாண கல்வித்துறையின் அபிவிருத்திக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை!
Reviewed by Author
on
April 10, 2016
Rating:

No comments:
Post a Comment