அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் ஈர்க்க கூடிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர் லிபரா (Lebara) ரதீசன், பாஸ்கரன், லியோன்


விமான நிலையம் அல்லது ரெயில் நிலையங்களில் பளிச்சிடும் நீல நிற சிம் அட்டை விற்பனை செய்பவர்களை கடந்து வந்திருந்தால், நிச்சயமாக லிபரா மொபைலை கடந்து வந்திருப்பீர்கள்.

லிபரா மொபைல் நிறுவனம் பற்றி சிறிய அளவில் தெரிந்திருந்தாலும், பாரியளவில் காணக்கூடிய நிறுவமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் பிரித்தானியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், பொருளாதார குடியேற்றவாசிகளுக்கு குறைந்த விலையில் சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகளை வழங்கி வருகிறது.

பிரித்தானியாவில் மிகப் பெரிய மொபைல் நிறுவனங்களான O2, EE, Vodafone மற்றும் Three நிறுவனங்களுடன் போட்டியிட்டு, ஒவ்வொரு மாதமும் பிரித்தானியாவில் வசிப்பதற்காக வரும் ஆயிரக்கணக்கான மக்களை வாடிக்கையாளர்களாக்கி தன்வசப்படுத்தி வருகிறது லிபரா மொபைல் .

லிபரா மொபைல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் இணை நிறுவனருமான யோகநாதன் ரதீசன் என்பவர் விற்பனை தளத்தை அறியாதவர் இல்லை.

“எமது ஊழியர்களும் அனைவரும் நாள் முழுவதையும் ரெயில் நிலையங்களில் செலவிட்டு, சிம் அட்டைகளை விற்பனை செய்கின்றனர்” என்றார், "இதனை செய்யவது எனக்கு விருப்பம். எங்கள நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இன்றைய நிலைமைக்கும் இதுவே காரணம்" எனவும் ரதீசன் கூறியுள்ளார்.

கடும் போட்டி நிலவி வரும் மொபைல் துறையில், வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எளிதானது அல்ல என்பதை அறிந்தே ஐரோப்பிய மொபைல் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது லிப்ரா நிறுவனம் குறைந்த கட்டணத்தில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக லிபரா மொபைல் நிறுவனத்தின் விற்பனையானது புலம்பெயர்ந்து வருவோர் மத்தியில் ஒரு இறுக்கமான இடத்தை பிடித்துள்ளது. லண்டனை தளமாக கொண்ட லிபரா நிறுவனம் பிரித்தானியா, ஜேர்மனி, டென்மார்க், ஒல்லாந்து, போலாந்து உட்பட ஐரோப்பா முழுவதும் 430 மில்லியன் பவுண் அளவுக்கு விற்பனை அதிகரித்திருப்பது இதற்கு சான்றாகும்.

உள்நாட்டு தொலைபேசி சேவை வலையமைப்பகளின் தளங்களில் தொகையாக வெளிநாட்டு அழைப்புகளுக்கான சேவைகளை விற்பனை செய்து வருகிறது. டெஸ்கோ மொபைல் மற்றும் கிப்கெப் போன்ற மொபைல் நிறுவனங்களும் இது போன்றசேவைகளை வழங்கி வருகின்றனர்.

லிபரா மொபைல் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு 127 மில்லியன் பவுண்களை வருவாயாக ஈட்டியதுடன் 8.7 மில்லியன் பவுண்களை வரியாக செலுத்தியது. நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துள்ளமையே இந்த வரி செலுத்துவதற்கான காரணம்.

லிபரா மொபைல் தற்போது மொபைல் வழியாக பண பரிமாற்றத்தை அறிமுகப்படுத்த உள்ளதுடன் மிக விரைவில் முன்செலுத்துல் அட்டை மற்றும் கடன் அட்டைகளுக்கு காப்புறுதி வசதிகளை வழங்க உள்ளது.

இலங்கையில் பிறந்தவரான ரதீசன் 20 வயதின் நடு பகுதியில் அதாவது 2001 ஆம் ஆண்டு தனது நண்பர்களான பாஸ்கரன் கந்தையா, ராசையா ரஞ்சித் லியோன் ஆகியோருடன் இணைந்து சர்வதேச தொலைபேசி அழைப்பு அட்டைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தை ஆரமபித்தார்.இவ்வாறான நிலையிலேயே இவர்களுக்கு மொபைல் நிறுவனத்தை ஆரம்பிக்கும் யோசனை வந்துள்ளது.

விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் நோர்வேயின் டெலிநோர் கட்டிடத்தை இவர்கள் அவதானித்துள்ளனர். அப்போது, ஐரோப்பிய மொபைல் சந்தையில் புலம்பெயர்ந்தும் வருவோரின் சந்தை வெற்றிடமாக இருப்பதை உணர்ந்துள்ளனர்.

ஒவ்வொரு நிறுவனர்களின் பெயரின் முதல் இரண்டு எழுத்தையும் கொண்டு அமைந்துள்ள இந்த நிறுவனம், டச்சு மொபைல் வலையமைப்பான கே.பி.என் மூலம் முதலீட்டை பெற்றுக்கொகண்டனர்.

"ஏன் புலம்பெயர்ந்து வருவோரின் சந்தையை பற்றி பேசுகிறேன் என்பதை பலர் புரிந்து கொள்ளவில்லை" என தற்போது பிரதான நிறைவேற்று அதிகாரியாக இருக்கும் ரதீசன் கூறியுள்ளார். எனினும் நெதர்லாந்தில் உள்ள கே.பி.என் நிறுவனத்தை சேர்ந்தவர் "ஆம்" என்று கூறியதுடன் என்னை முயற்சித்து பார்க்குமாறு கூறினார்.

சிம் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நாள்களில் காலையில் 25 000 சிம் அட்டைகளை விற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லிபரா நிறுவனம் தற்போது 5 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

40 வயதாகும் ரதீசன் இலங்கையின் போர் காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்னர், குடும்பத்துடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்து தற்போது ஈர்க்க கூடிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தமது நிறுவனத்தின் மதிப்பீட்டு தொகையானது 250 மில்லியன் பவுண்கள் எனக் கூறும் அவர், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தவர்களுக்குத் தான் கடன்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையரான சுபாஸ்கரன் அல்லிராஜா 2006ஆம் ஆண்டில் ஆரம்பித்த லைக்கா மொபைல் நிறுவனமே லிபரா நிறுவனத்தின் பிரதான போட்டியாளர்.

இந்த போட்டி கடுமையாக இருப்பது கடும் ஆச்சரியமானது. லண்டனை தளமாக கொண்ட லைக்கா மொபைல் நிறுவனம் வெளிநாட்டுக்கு பயணத்தை அனுப்பியதன் ஊடாக கூட்டுத்தாபன வரியை செலுத்தாது ஏய்ப்பு செய்துள்ளதாக லிபரா நிறுவனம் பொலிஸில் சந்தேக முறைப்பாடு ஒன்றை செய்திருந்தது. எனினும் லைக்கா மொபபைல் நிறுவனம் அதனை மறுத்திருந்தது.

எனினும் கடந்த வருடம் BuzzFeed இணைத்தளதில் வெளியான செய்தி ஊடாக லிபரா நிறுவனத்தின் சட்டத்தரணிகள் குற்றச்சாட்டை நிரூபித்திருந்ததுடன் முறையற்ற வர்த்தக தொடர்புகளை கண்காணிக்க லிபரா நிறுவனம் தனியார் புலனாய்வாளர்களுக்கு பணம் செலுத்திருந்தது.

லைக்கா மொபைல் நிறுவனம் 2014ஆம் வருடம் வரிக்கு முன் 1.9 மில்லியன் பவுண்கள் லாபமாக அறிவித்திருந்தது. அனால் கடந்த நிதியாண்டுக்கான கணக்குகள் இன்னும் சமர்பிக்கப் படவில்லை என்றும், அவை கடந்த கார்த்திகை மாதம் கொடுக்க படவேண்டியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுபாஷ் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் கன்சர்வேட்டிவ் கட்சியின் மிகப் பெரிய நிதி கொடையாளி நிறுவனமாகும்.இந்த நிறுவனம் நிறுவனங்கள் அலுவலகத்தில் குறித்த நேரத்தில் கணக்கு விபரங்களை சமர்பிக்காமை தொடர்பில் அண்மையில் சிறு இறுக்கத்தை எதிர்நோக்கியது. எனினும் அது குறித்து கருத்து வெளியிட அந்த நிறுவனம் எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கவில்லை.

இந்த நிலையில், அரச நிறுவனங்கள் தொடர்பில் தன்னுடைய நிறுவனம் வெளிப்படையாகவும் ஒருமைப்பாட்டுடன் செயற்பட்டு வருவதாக லிபரா ரதீசன் தெரிவித்துள்ளார்.

நிதி சேவைகளில் மற்றும் எரிக்சக்தி தொழிற்துறை சந்தையில் வாடிக்கையாளர் சேவையில் முதலீடு செய்யும் தொலைத் தொடர்புதுறையில் தனது நிறுவனம் நற்பெயரை விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச தொலைபேசி அழைப்பு வர்த்தக விளம்பரங்கள் மூலம் மறைமுகமான கட்டண அறவீடுகள் மற்றும் வாடிக்கையாளர்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.

சர்வதேச தொலைபேசி அழைப்பு அட்டைகளில் ஒரு நிமிடத்திற்கு வாடிக்கையாளர்கள் உண்மையில், விளம்பரம் செய்யப்பட்டதில் 28 விகிதம் மட்டுமே பெறுவதாக ஒப்கோம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தொலைதொடர்பு ஒழுங்குப்படுத்தல்கள் குழப்பமாக இருப்பதாக பல குற்றச்சாட்டைகளை அட்டைகளை பயன்படுத்தும் வடிக்கையாளர்கள் தமது அனுபவங்களை முன்வைத்துள்ளனர்.

மொழியை அறியாத வாடிக்கையாளர்கள் தமது சொந்த மொழி அல்லாத மொழியிலான விதிமுறைகளை புரிந்து கொள்ள முடியாதுள்ளனர்.

புலம்பெயர்ந்து வரும் மக்களின் இந்த செலவானது ஒரு வரலாற்று கவலை என ரதீசன் கூறியுள்ளார்.

தொலைபேசி அழைப்பு அட்டை துறையானது அசாதாரண குற்றச்சாட்டுக்களுக்கு பிரபலமான துறையாகும், மிகவும் ஆரம்ப காலத்தில் தாம் அவர்களுடன் போட்டியிட்டுள்ளதாகவும் ரதீசன் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்தின் விற்பனை உத்திகள் பிடிக்காமல் இருக்கலாம், எனினும் லிபரா தனது சேவைக்காக விருதுகளை பெற்றுள்ளது. வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டு, வருடாந்த மொபைல் செய்தி விருதுகளை லிபரா கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியாக பெற்று வருகிறது.

லிபரா நிறுவனம் மிகப் பெரிய மொபைல் போட்டியாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி வருவது அதிகரித்துள்ளதாக ஓப்கோமின் புதிய தரவுகள் காட்டுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வோடபோனுக்கு தனது ஒப்பந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து தொழில் ரீதியான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த தொழில்துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதை

ஓப்கோம் தரவுகள் காட்டுகின்றன.

கடந்த ஒக்டோபர் மாதம் EE மொபைல் நிறுவனம் குறைந்த கட்டண வெளிநாட்டு அழைப்பு பொதிகளை வழங்கியது. அவுஸ்திரேலியா, இந்தியா, அயர்லாந்து மற்றும் அமெரிக்காவுக்கு மாதாந்தம் 10 பவுண்கள் என்ற கணக்கில் குறைந்த கட்டணத்தை வழங்கியது. தரைவழி தொலைபேசி இணைப்புகளுக்கும் இப்படியான சலுகையை Virgin Media வழங்கியுள்ளது.

"சொந்த நாடுகளில் இருக்கும் குடும்பங்கள், நண்பர்களுடன் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வது மிகவும் முக்கியமானது, எமது நிறுவனம் இது குறித்து மிகவும் கவனம் செலுத்தி வருகிறது" எனவும், "எனது தந்தை எமது கோல் சென்டருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தால் கூட அவருக்கு எம்மால் உதவம் படியாக இருக்க வேண்டும்" எனவும் ரதீசன் குறிப்பிட்டுள்ளார்.

லிபரா ஊழியர்களை எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும் அவர்கள் 43 மொழிகளில் வாடிக்கையாளர்களுடன் உரையாடுவர். "ஒரு மொழியில் சிறந்த சேவைகளை வழங்குவதே பல மொபைல் நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினையாகும்" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லண்டன் Old Street பகுதியில் லிபரா தலைமையகத்தில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு ரதீசனுக்கு பிடித்த அன்னை தெரேசா முதல் ஹென்ரி போர்ட் ஆகியோரின் பொன்மொழிகள் சுற்றி வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து கூட்ட அறைகளிலும் இது காணப்படுகிறது. ஆனால், சில உருவாக்கப்பட்டுள்ளன.

எமது நிதி குழுவில் நீங்கள் இணைந்தால், "குறித்த நேரத்தில் எம்மவர்க்கு நாங்கள் பணத்தை செலுத்துவோம்" என்ற வாசகத்தை நீங்கள் தவற விடமுடியாது எனவும் ரதீசன் தெரிவித்துள்ளார்.

க்ளாஸ்டோர் .கோம் இணையத்தளத்தின் அடிப்படையில் ரதீசன் பிரித்தானியாவில் உள்ள 25 முன்னணி முதலாளிகளில் ஒருவர்.

வை.பை தேவை அதிகரித்து, வருவதே லிபரா எதிர்நோக்கி வரும் வருமான குறையும் சவால்களில் ஒன்றாகும்.

"இந்த விடயத்தி்ல் அனைத்து மொபைல் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன" என ரதீசன் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் கடந்த வருடம் பிரித்தானியாவக்கு வருகை தந்துள்ள புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையானது 11 வீதமாக அதிகரித்துள்ளது தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் விவசாய வேலைகளுக்காக ரோமானியர்கள், போலந்து, ஹங்கேரியர்கள் வருகை தர இருப்பதாகவும், இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் இது தமது நிறுவனத்திற்கு ஊக்கமளிக்கும் செய்தி எனவும் அவர் ரதீசன் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் நடந்தேறும் சமகால அரசியல் நகர்வுகளால் தமது நிறுவனத்திற்கு அதிக பாதிப்பு இருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், புலம்பெயர் மக்களை நம்பியே தமது நிறுவனம் செயற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் இருக்கும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை மிகப் பெரியது. இதனால், மிகப் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமது நிறுவனம் பாதிப்பை எதிர்நோக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் ஈர்க்க கூடிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர் லிபரா (Lebara) ரதீசன், பாஸ்கரன், லியோன் Reviewed by Author on April 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.