மகிழ்ச்சி என்பது செல்போன் ஆப்ஸ் போன்றதல்ல: போப் பிரான்சிஸ்....
மகிழ்ச்சி என்பது செல்போனில் தரவிறக்கம் செய்யும் ஆப் போன்றதல்ல என ரோம் நகரில் இளைஞர்களுக்கு சொற்பொழிவாற்றிய போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
ரோம் நகரில் நடைபெற்ற இளைஞர்களுக்கான கூட்டத்தில் போப் பிரான்சிஸ் சொற்பொழிவாற்றினர். அப்போது அவர், கடவுள் இல்லாத வாழ்க்கை என்பது சிக்னல் இல்லாத செல்போனை போன்றது. எனவே பள்ளியே, குடும்பமோ எங்கே சென்றாலும் இணைப்பு இருக்கும் இடத்துக்கு செல்லுங்கள்.
சுதந்திரம் என்பது நாம் நினைத்ததை செய்வதல்ல. அது நமக்கு கிடைத்த பரிசு, நாம் தான் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் மகிழ்ச்சிக்கு விலை என்பதே இல்லை. அதை வாங்கவோ விற்கவோ முடியாது. செல்போனில் ஆப்ஸ்(Application) தரவிறக்கம் செய்வது போல் அல்ல.
என்ன தான் புதிய பதிப்பாக இருந்தாலும் கூட நீங்கள் அன்பில் வளருவதற்கு அது உதவாது என்று பேசினார். சுமார் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இதில் கலந்துகொண்டனர்.
மகிழ்ச்சி என்பது செல்போன் ஆப்ஸ் போன்றதல்ல: போப் பிரான்சிஸ்....
Reviewed by Author
on
April 26, 2016
Rating:

No comments:
Post a Comment