அண்மைய செய்திகள்

recent
-

சிரியாவில் அடுத்தடுத்த வெடிகுண்டு தாக்குதல்கள்: 100 பேர் பலி.....


சற்று முன்னர் வெளியாகியுள்ள தகவலில் Jableh பகுதிகளை சுற்றி 7 வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 100 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேசமயம், ரஷ்ய நாட்டை சேர்ந்த ராணுவ பயிற்சி மையங்கள் மற்றும் ரயில் நிலைத்திற்கு அருகில் இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கும் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


முதலாம் இணைப்பு.......
சிரியாவில் சற்று முன்னர் அடுத்தடுத்து நிகழ்ந்தவெடிகுண்டு தாக்குதல்களில் பலர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவின் Latakia மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரான Jableh என்ற பகுதியில் அமைந்துள்ள ரயில் நிறுவனத்திற்கு அருகில்தான் இந்த தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

சிரியா ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் ‘பல இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும், பலர் பலியாகியிருக்க வாய்ப்புள்ளது’என அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

முதல் கட்டமாக வெளியாகியுள்ள தகவலில்3 வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதற்கு பின்னார் தீவிரவாத அமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.


சிரியாவில் அடுத்தடுத்த வெடிகுண்டு தாக்குதல்கள்: 100 பேர் பலி..... Reviewed by Author on May 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.