தமிழகத்தின் புதிய முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார் - அமைச்சர் டெனிஸ்வரன்
தமிழகத்தின் புதிய சரித்திரம் படைத்த தலைவியே, புரட்சித் தலைவரின் வழியில் இரண்டாவது தடவையாக தொடர்ந்தும் முதல்வராக பதவி ஏற்கவுள்ள தனிச் சிறப்புமிக்க தமிழகத்தின் புதிய முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாழ்த்து தெரிவிக்கையில்,
செல்வி ஜெயலலிதாவிற்கு வாக்களித்து அவருக்கு தொடர்ந்தும் முதல்வராக வெற்றிக்கிரீடம் தரிக்கவைத்த எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழகத்து அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதேவேளை உருவாகவுள்ள புதிய அரசு மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றும் ஓர் வினைத்திறன் மிக்க அரசாக செயற்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் பா.டெனிஸ்வரன் தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று பதவி ஏற்கவுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை வாழ்த்தி தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார் - அமைச்சர் டெனிஸ்வரன்
Reviewed by Author
on
May 23, 2016
Rating:

No comments:
Post a Comment