அண்மைய செய்திகள்

recent
-

சச்சினின் 11 வருட சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அலாஸ்டர் குக்!


இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலாஸ்டர் குக் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுகரின் சாதனையை முறியடிக்கப் போகிறார்.

31 வயதாகும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான அலாஸ்டர் குக் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 36 ஓட்டங்களே தேவை.

இந்த மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் 2005ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எட்டினார். அப்போது அவருக்கு வயது 32.

இந்நிலையில் இலங்கைக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் குக் 10,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டும்பட்சத்தில் குறைந்த வயதில் இந்த மைல்கல்லை எட்டிய சச்சினின் சாதனையை அவர் முறிடிப்பார்.

மேலும், டெஸ்டில் 10,000 ஓட்டங்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும், ஒட்டுமொத்தமாக 12வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும்.

இந்த மைல்கல்லை சச்சின், லாரா, சங்கக்காரா ஆகியோர் 195 இன்னிங்சிகளிலே கடந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினின் 11 வருட சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அலாஸ்டர் குக்! Reviewed by Author on May 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.