40,000 பேரை இடம்பெயரச் செய்த சகதி ஓட்டம்: இயற்கையின் வினோதம்....
இந்தோனேசியாவில் உள்ள Sidoarjo என்ற பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திடீரென நீரும் மண்ணும் சேர்ந்து சகதியாக அதிகளவில் ஓட்டம் ஏற்பட்டதால் சுமார் 40,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு, அந்த பகுதியில் ரிக்டர் அளவில் 6.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2 நாட்கள் கழித்து தான் இந்த சகதி ஓட்டம் தொடங்கியுள்ளது.
என்ன காரணத்தினால் இது தொடர்ந்தது என்பது அறியாத நிலையில், சகதி தொடர்ந்து அந்த பகுதியில் அதிகரித்து கொண்டே இருந்துள்ளது.
இதனால் சிலர் உயிரிழந்த நிலையில், பலரது வீடுகளும் வாழ்வாதாரங்களும் அழிவுக்குள்ளாகின. இதையடுத்து அந்த பகுதியில் வாழ்ந்து வந்த சுமார் 40,000 பேர் அந்த பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
10 ஆண்டுகள் முடிந்த நிலையில், தற்போதும் அந்த சகதி தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் உள்ளது. தற்போது சுற்றுலா மையமாக இந்த பகுதி உள்ளது. எனவே அப்பகுதிவாசிகள் சுற்றுலாவால் தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.
40,000 பேரை இடம்பெயரச் செய்த சகதி ஓட்டம்: இயற்கையின் வினோதம்....
Reviewed by Author
on
May 31, 2016
Rating:

No comments:
Post a Comment