மன்னார் இலுப்பைக்கடவையில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்பு.(படம்)
மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
-மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜட்டவர அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக,மன்னார் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.டபில்யு.ஹேரத் தலைமையில் சென்ற பொலிஸ் சாஜன் கமகே(25405), எத்தனாயக்க(49615),பொலிஸ் கொஸ்தபில்களான சுமித்(35802),உப்புல்(16512), ஸ்ராலின்(5938),பொலிஸ் சாரதி ஹசந்த(15464) ஆகியோர் இணைந்து குறித்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் 5 கிலோ 450 கிராம் எடை கொண்டது எனவும் அதன் பெறுமதி 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும்,விசாரனைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் இலுப்பைக்கடவையில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்பு.(படம்)
Reviewed by Author
on
May 16, 2016
Rating:
No comments:
Post a Comment