அரசின் ஒட்டுமொத்த தமிழ் அமைச்சர்களும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்பு!
தனியார் துறையினருக்கு வழங்குவதாகக் கூறிய 2500 ரூபா சம்பள உயர்வை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டும் எனக் கோரி அரசாங்கத்தின் தமிழ் அமைச்சர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சத்தியாக்கிரகப் போராட்டம் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், சிறிதுங் ஜயசூரிய உட்பட தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்காலிகமாகவேனும் சம்பளத்தைக் கூட்டித்தருமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பல பேச்சுவார்த்தைகளை நடாத்தியதுடன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்னவும் இது பற்றி பல கோரிக்கைகளை முன்வைத்து எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவித்தார்கள்.
14 நாட்களுக்குள் தற்காலிகமாகவேனும் இவர்களுக்கான சம்பளத்தை கொடுக்க வேண்டும் இல்லையேல், நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கின்றார்கள்.
மேலும் எதிர் காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு தமக்கு கிடைக்கும் என இவர்கள் தெரிவித்தார்கள்.
அரசின் ஒட்டுமொத்த தமிழ் அமைச்சர்களும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்பு!
Reviewed by Author
on
May 26, 2016
Rating:

No comments:
Post a Comment