மட்டு.தொழில் நுட்பக் கல்லூரியினால் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரல்...
மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் நீர்குழாய் பொருத்துனர், மரக் கைப்பணியாளர்(கட்டடம்), மேசன் கைப்பணியாளர், வாயு மற்றும் வில் உருக்கி ஒட்டுதல் போன்ற ஆறு மாத கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இந்தக் கற்கை நெறிகளுக்கு தரம் பத்தை பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. மேலும் இந்தக் கற்கை நெறிகளைத் தொடரும் மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 3000 உதவித் தொகையும், போக்குவரத்திற்காக அரை மானியத்துடனான பருவகாலச் சீட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சித் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிழ் மற்றும் NVQ மட்டத்திலான மூன்று சான்றிதழ்களும் வழங்கப்படும் என மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ரி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் உதவிக்கணிய அளவையியல், தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர், மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் பழுது பார்த்தல், கணினி வன்பொருளுக்கான சான்றிதழ் போன்ற ஆறு மாத கற்கை நெறிகளுக்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இதற்கு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் கணிதம், தமிழ், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
இதற்கு மாதாந்தம் ரூபா ஆயிரம் வழங்கப்படுவதுடன், போக்குவரத்துக்காக அரை மானியத்துடனான பருவகாலச் சீட்டும் வழங்கப்படும். எனவே மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரியின் வழிகாட்டல் பிரிவில் விண்ணப்பத்தினைப் பெற்று கையளிக்குமாறு மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ரி.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டு.தொழில் நுட்பக் கல்லூரியினால் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரல்...
Reviewed by Author
on
May 22, 2016
Rating:
Reviewed by Author
on
May 22, 2016
Rating:


No comments:
Post a Comment