தொழிலதிபராக லண்டனை கலக்கும் தமிழர்....
ஒட்டுமொத்தமாக லண்டன் மாநகரில் ஒருவரால் அனுபவித்து மகிழக்கூடியவைகளின் தொகுப்பை கட்டணச் சேவையாக வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது ஒண்டர் ரஷ்(Wonderush) நிறுவனம். இந்நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை அதிகாரியுமாக செயல்பட்டு வருபவர் நெல்சன் சிவலிங்கம். லண்டனின் கிழக்கு பகுதியில் பிறந்து வளர்ந்த நெல்சன் தமது புதிய நிறுவனம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
தொழிலில் இதுவரையான சிறப்பம்சமாக கருதுவது புதுமையான இளம் நிறுவனர்களில் 30 பேரில் ஒருவராக Virgin Media Business அமைப்பு தெரிவு செய்ததே எனக்கூறும் நெல்சன். Richard Branson பங்கேற்ற நிகழ்வில் கலந்துகொண்டதும் சிறப்பானது என்றார். உங்களிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது எந்தளவுக்கு உங்களிடம் விடாமுயற்சி உள்ளது என்பதையே. ஒரு விடயத்தை முன்னெடுக்க முனையும்போது பலமுறை அதுகுறித்து சிந்திக்க வேண்டும்.
எத்தனை தடைகள் வரும் பின்னோக்கி நம்மை நகர்த்தும் சக்திகள் எவை என. புதிதாக இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது தமக்கு உறுதுணையாக பொருளாதார உதவி வழங்க ஒருவர் முன்வந்தால் அதுவே போதும் என நினைத்திருந்தேன். ஆனால் தற்போது 10 மடங்கு அதிகமாக ஒண்டர் ரஷ் ஈட்டித் தந்துள்ளது. இன்னும் இந்த நிறுவனத்தை உலக அளவில் விரிவடைய செய்ய முனைந்து வருகிறோம்.
அடுத்து முக்கியமானது தடைகள் நோக்கியுள்ள மக்களின் மனநிலை. பல்வேறு திட்டங்களுடன் இருப்பவர்களுக்கும் எதுவுமே அற்றவர்களுக்குமான வேற்றுமை அதுவே. இலங்கையிலிருந்து குடியேறிய எங்களது பெற்றோர் அனைத்தையும் இழந்து இங்கு வந்தே புதிதாய் தங்களது வாழ்க்கையை துவங்கினர். இவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளை இங்கே பார்ப்போம்.
கனவுகளை நோக்கி நகர பெற்றோர் மற்றும் நண்பர்களின் தாக்கம் எந்தளவு இருந்தது?
நெல்சன் மண்டேலாவின் மிக தீவிர ரசிகராக இருந்த எங்கள் தந்தை எனக்கும் நெல்சன் என பெயர் சூட்டினார். மக்களின் திறமைதான் பெரிதாக எதுவும் முன்னெடுத்துச் செல்ல அவர்களை தூண்டுகிறது. பெற்றோரை பொறுத்தமட்டில் தொழில் முறையாக அவர்களுக்கு மொத்த புரிதல் இருக்க தேவையில்லை, ஆனால் உங்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் எனக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளனர். மேலதிகமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தான் எனது ஊக்கத்திற்கு முக்கிய காரணம்.
இந்நிலையை எட்டுவதற்கு எதிர்கொள்ள வேண்டிய தடைகள் என்ன?
துவக்க காலகட்டத்தில் ஆப்பிள் மற்றும் L’Oreal நிறுவனங்களில் சிறிது காலம் பணிபுரிந்தபோது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பெருநிறுவனங்களில் பணிபுரிவதல்ல தமது ஆசை மாறாக தம்மை வெளிப்படுத்திக்கொள்ள வகை செய்யும் சிறு நிறுவனங்கள் அல்லது சொந்தமாக ஒரு நிறுவனம். தமது நண்பர்கள் அனைவரும் பெருநிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும்போது அவர்களுடனான சந்திப்பு பலமுறை நமது கனவுகளை சோதிக்க வைக்கும். ஒரு தொழில் நிறுவனம் வளர்ச்சி பெற்று வரும்போது பலவாறான தடைகள் தோன்றுவது இயல்பு.
கனவுகளை சாத்தியமாக்கும்போது எழும் பயம் பற்றி?
ஒரு தொழில் துவங்கும்போது பல்வேறு கேள்விகள் நமக்குள் எழும். முதல் இரண்டு ஆண்டுகளில் எதையும் நாம் சாதிக்கவில்லை எனில் மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டுமா. இந்த தருணங்களை கடந்து சென்று சாதிக்க ஓஷோ எழுதிய Courage புத்தகம் பேருதவியாக இருந்தது.
உங்களை மிருகமாக உவமைப்படுத்திக் கொண்டால், எந்த மிருகம்?
யானை என்பதே எனது தெரிவு. அவை ஒட்டுமொத்தமாக நிறைந்து காணப்படும், மிக அமைதியாக இருக்கும், எதுவும் நடக்கும் வரை. ஒரு அறைக்குள் யானை ஒன்று இருப்பதாக மக்கள் கூறினால், அதை குறித்தே ஒட்டுமொத்த கவனமும் திரும்பும். அப்படி ஒட்டுமொத்த கவனத்தையும் குவிக்கவே ஆசைப்படுகிறேன்.
தொழிலதிபராக லண்டனை கலக்கும் தமிழர்....
Reviewed by Author
on
May 15, 2016
Rating:

No comments:
Post a Comment