அண்மைய செய்திகள்

recent
-

வடக்குக்கான நிதி திரும்பியமை குறித்து ஆனந்தசங்கரி கேள்வி....


வடக்கு மாகாண அபிவிருத்திகளுக்காக ஒதுக்கப்பட்ட பெருமளவு பணம் செலவழிக்கப்படாமல் திறைசேரிக்கு திரும்பியுள்ளமை குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணி கேள்வி எழுப்பியுள்ளது.

கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, இந்த நிலைமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் இயங்கும் மாகாணசபையின் திறமையின்மையே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மக்களி;ன் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணப்படவில்லை. இதனை நீக்கும் வகையிலேயே புதிய முன்னணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலம் அதிக நன்மைகளை பெறமுடியும் என்று எதிர்ப்பார்த்தனர்.

எனினும் கூட்டமைப்பினர் தமது நன்மைகளுக்காக தமக்குள்ளேயே சண்டை பிடிக்கின்றனர். அவர்களால் அரசியல் கைதிகளின் விடுதலை விடயம், சம்பூர் பிரச்சினை, வடக்கின் நீர் பிரச்சினை போன்றவை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படவே இல்லை: ஆனந்த சங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தச்சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகளுக்கு மாறாக செயற்படவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

இன்று யாழ் தலைமை செயலகத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைவிட்டு சென்ற போது என்னால் எழுதப்பட்ட பல விடயங்களில் சில, கிளிநொச்சி தோல்வியடைந்ததன் பின் இந்த யுத்தத்தில் வெற்றி காண முடியாது என்றும்,

ஏதாவதொரு உடன்பாட்டுக்கு வந்து பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை தம்பி பிரபாகரனோடு தொடர்பு கொண்டு காப்பாற்றுமாறும் அன்றேல் பாராளுமன்ற பதவிகளை துறந்து விடுங்கள் என்று விடுதலைப் புலிகளை வைத்து வியாபாரம் செய்தவர்களை பார்த்துக் கேட்டேன்.

அரசாங்கத்தை பார்த்து நீங்கள் புலிகள் அல்ல. நட்புறவுள்ள வேறு நாட்டோடு தொடர்பு கொண்டு அவசியம் ஏற்பட்டால் நிபந்தனையற்ற மன்னிப்பு கொடுத்து, அந்த அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு என்று சுட்டிக்காட்டினேன்.

நான் மக்களுக்கு எவ்வித துரோகமும் செய்யவில்லை.இனப்பிரச்சினை சம்பந்தமாக அரசுடன் பேசுவதற்கு புலிகளுக்கு பூரண அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று ஒரு தடவையல்ல பல தடவைகள் கூறியிருந்தேன்.

14 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் 36 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று யாழ் மாவட்டத்தில் ஒன்பது பேரில் முதலாவதாக வந்த நான் பாராளுமன்றம் சென்றேன்.

advertisement


அடுத்த தேர்தலில் காரணம் எதுமின்றி திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டேன். இச்செயல் 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளால் என்னை தெரிவு செய்த தமிழ் மக்களுக்கு இவர்கள் செய்தது துரோகமில்லையா?

விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாகவும் தமிழ் தேசியத் தலைமையாகவும் ஏற்றுக்கொண்டதாக பிரகடனப்படுத்தியே தேர்தலில் போட்டியிட்டு பலபேரை பலி கொடுத்து 22 ஸ்தானங்களை கைப்பற்றினர்.

இத்தேர்தல் நடத்தப்பட்டதே முற்று முழுதாக சட்ட விரோதமானதாகும். தமிழர் விடுதலைக கூட்டணியே இத்தனை ஸ்தானங்களை பெற்று கொடுக்க வேண்டிய இச்சந்தர்ப்பத்தில் இந்த மோசடி அர்த்தமற்றதாகிப் போய்விட்டது மட்டுமல்ல, விடுதலைப் போராட்டத்துக்கு பெரும் களங்கமும் ஏற்படுத்தியது.

2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இராணுவத் தளபதி விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் செய்து யுத்தம் முடிந்த பின் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை இரட்டிப்பேன் என்று கூறிய இராணுவ தளபதியை ஜனாதிபதி பொது வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரித்ததே.

அவர் பெற்றுக் கொண்ட வாக்குகள் 1,13,000 இவர்கள் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை எனது மனச்சாட்சிக்கு விரோதமாக நான் என்றும் செயற்பட்டவனல்ல.

கடந்தகாலத்தில் அரசியலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டதுண்டு. தப்புகள், தவறுகள் பலவிதத்தில் நடந்திருக்கலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரித்தது ஜனாதிபதி பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை பிரதம மந்திரி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அவர்களையுமே.இது தமிழர் விடுதலைக் கூட்டணியின் முடிவாகும்.

சகல பத்திரிகைகளிலும் வெளியாகிய செய்தியுமாகும். வேட்பாளராக நியமனம் பெற்றபோதும் வென்றபோதும் இருவரையும்தொலைபேசியில் வாழ்த்தியிருந்தேன்.

ஆனால் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் என்னுடன் இதுவரை எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை. சந்திப்புக்கான கோரிக்கைக்கும் செவிசாய்க்கவில்லை.

இது சிறுபிள்ளை அரசியலாகும். சிறுபிள்ளைகள் யாரென்பதை நான் கூறத்தேவையில்லை. ஏனெனில் கௌரவ ரணில் விக்கிரமசிங்க ஒரு நீண்டகால அரசியல்வாதி.

நாட்டு மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் ஜனநாயகம் அழிக்கப்படுவதாக கூறி ஆட்சிமாற்றம் செய்த மக்களில் நாமும் உள்ளடங்குவோம்.

ஆனால் தற்போது நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா? என மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.வெறும் சம்பிரதாயத்துக்காக அல்ல.

தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகர்களில் ஒருவராகிய நான் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராகவுள்ளேன்.

பதவி துறப்பாக இருந்தாலும் சரி, பதவி மாற்றமாக இருந்தாலும் சரி இதில் எது நியாயமான கோரிக்கையாக உரிய இடத்திலிருந்து வருகின்றதோ அதற்கமைய செயற்பட நான் தயாராக இருக்கின்றேன்.

ஒற்றுமை கருதி எனக்கு தெரிந்த பல உண்மைகளை இதுவரை மறைத்தும் இனியும் தொடர்ந்து மறைப்பதற்கும் எனது பலயீனம் காரணமல்ல.

இன ஒற்றுமையில் இருக்கின்ற ஆர்வமே காரணமாகும்.2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தொடக்கம் இன்றுவரை பல தேர்தல்களில் போட்டியிட்டு தோற்கவில்லை.

திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டேன்.மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என சில சிறுசுகள் கூறுவது அவர்களின் அறியாமையே. திட்டமிட்டவர்களுக்கு உண்மை தெரியும் என்றார்.

வடக்குக்கான நிதி திரும்பியமை குறித்து ஆனந்தசங்கரி கேள்வி.... Reviewed by Author on May 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.