அன்று முதல் இன்று வரை தமிழ் தேசியத்தின் கொள்கைகளுடன் செயற்பட்டவர் எஸ்.ஞானப்பிரகாசம்.
தமிழ் தேசியத்திற்காக தனது வாழ்வை அற்பனித்து மக்களுக்கு இறுதி வரை சேவை செய்து இன்று இயற்றை எய்திய மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தின் பிரிவு தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) விற்கு பாரிய இழப்பு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தனது 67 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இரங்கள் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
'அருமை'அண்ணண் என செல்லமாக அழைக்கப்படும் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகர சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.
அதி கூடிய வாக்குகளை பெற்று மன்னார் நகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டு மக்களுக்காக தனது சேவையை ஆரம்பித்தார்.
அன்று முதல் இன்று வரை தமிழ் தேசியத்தின் கொள்கைகளுக்கு உற்பட்டவராகவும்,தமிழ் உணர்வாளராகவும் செயற்பட்டார்.
தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற சகல விடையங்களிலும் கலந்துகொண்டு எங்களுக்கு பக்க பலமாக செயற்பட்டவர்.
இந்த நிலையில் அவர் திடீர் மரணம் அடைந்தமை தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும்,குறிப்பாக தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ)விற்கும் பேரிழப்பு.
அன்னாரில் பிரிவால் துயரடைந்துள்ள மனைவி,பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்று முதல் இன்று வரை தமிழ் தேசியத்தின் கொள்கைகளுடன் செயற்பட்டவர் எஸ்.ஞானப்பிரகாசம்.
Reviewed by NEWMANNAR
on
May 16, 2016
Rating:

No comments:
Post a Comment