மன்னார் மாவட்டத்தில் 57 குடும்பங்கள் பாதிப்பு-வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை.Photos
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக இதுவரை 57 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட திடீர் அனர்த்தப்பிரிவின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் முஹமட் றியாஸ் தெரிவித்தார்.
இதனடிப்படையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகயில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் பாதீக்கப்பட்ட நிலையில் அவர்கள் இடம் பெயர்ந்து பொது கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை நானாட்டான் பிரதேச்ச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 50 குடுமு;பங்களைச் சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மன்னார்-யாழ் பிரதான வீதியூடான போக்குவரத்துக்கள் பாதீக்கப்பட்டுள்ளது.
பாலியாற்று பிரதான வீதியை வெள்ள நீர் மேவிப்பாய்கின்றமையினால் போக்குவரத்துக்கள் பாதீக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரசபை பிரிவுக்குற்பட்ட எமில்நகர்,சாந்திபுரம்,ஜீவநகர்,சாந்திபுரம், சௌத்பார் ஆகிய கிராமங்கள் மழை வெள்ள நீரினால் சூழ்ந்துள்ளது.
குறித்த வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மன்னார் நகர சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் 57 குடும்பங்கள் பாதிப்பு-வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை.Photos
Reviewed by NEWMANNAR
on
May 16, 2016
Rating:

No comments:
Post a Comment