வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வலசைப் பறவைகள் பற்றிய செயலமர்வு
வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வலசைப் பறவைகள் பற்றிய செயலமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது வாரத்தின் இறுதி நாட்களில் சர்வதேச அளவில் உலக வலசைப் பறவைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லி வலசைப் பறவைகள் பற்றிய அறிவூட்டலை ஏற்படுத்தும் நோக்குடன் வடக்கு சுற்றாடல் அமைச்சு கல்வி அமைச்சுடன் இணைந்து மூன்று நாள் வதிவிடச் செயலமர்வு மற்றும் வெளிக்களப் பயிற்சியை ஒழுங்குசெய்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (13.05.2016) ஆரம்பமான இந்நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெற உள்ளது. இதில் வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
வளவாளர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல்துறையைச் சேர்ந்த கலாநிதி க.கஜபதி, கலாநிதி சி.அபிராமி, செல்வி க.கஜவதனி ஆகியோரும் தன்னார்வப் பறவையியல் ஆய்வாளர்கள் க.அசோகன், பா.ராஜ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
செயலமர்விலும் வெளிக்களப்பயிற்சியிலும் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை (15.05.2016) யாழ் பொது நூலக கேட்பேர் கூடத்தில் பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளது.

வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வலசைப் பறவைகள் பற்றிய செயலமர்வு
Reviewed by Author
on
May 14, 2016
Rating:

No comments:
Post a Comment