அண்மைய செய்திகள்

  
-

கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் ஆரம்பம்...


சிவில் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது.

இன்று 10 .30 மணியளவில் ஆரம்பமாகிய இக் கலந்துரையாடலில் சிறுவர், பெண்கள் பாதுகாப்பு ,சிறுவர் துஸ்பிரயோகம், சட்டவிரோத செயற்பாடுகள் போன்ற கிளிநொச்சி மக்களின் பொது நலம் சார்ந்த பல விடயங்கள் ஆராயப்பட்டுகொண்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சியில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள் மதத்தலைவர்கள் ,பிரஜைகள் குழு உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் ஆரம்பம்... Reviewed by Author on May 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.