அண்மைய செய்திகள்

recent
-

வடக்கின் நீலங்களின் சமர் வெற்றிக்கிண்ணம் கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் கையில்!


கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற வடக்கின் நீலங்களின் சமர் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது இன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரிஅணி சமரின் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

நேற்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி களத்தடுப்பை தீர்மானித்து களமிறங்கியது.

இரண்டு நாட்களைக் கொண்டுநடத்தப்பட்ட டெஸ்ட் கடினப்பந்து போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி 35.வது பந்து பரிமாற்றத்தின் நான்காவது பந்துவீச்சில் அணி அனைத்து விக்கற்களையும் இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து துடுப்பாட களமிறங்கிய இந்துக்கல்லூரி அணியினர் பதினாறாவதுபந்து பரிமாற்றத்தின் மூன்றாவது பந்தில் மூன்று விக்கற் இழப்பிற்கு 71ஓட்டங்களை அணி அடைந்த வேளை மழை குறுக்கிட்டமையால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு இன்று காலை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது.

போட்டியில்இந்துக்கல்லூரிஅணியினர் மூன்று விக்கற் இழப்பிற்கு 51 வது பந்துப்பரிமாற்ற நிறைவில் 206ஓட்டங்களை பெற்ற வேளை தமது வெற்றிக்கு ஓட்டங்கள் போதும் என அணிதலைவரால் தீர்மானிக்கப்பட்டு துடுப்பாட்டம் கிளிநொச்சி மத்திய கல்லூரிஅணிக்கு வழங்கப்பட்டது.

துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்தியகல்லூரி அணி 31 வது பந்து பரிமாற்றத்தின் நான்காவது பந்து வீச்சில் அணிஅனைத்து விக்கற்களையும் இழந்து70 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட ஒருஇனிங்ஸ் மற்றும் நான்கு ஓட்டங்களால் இந்துக்கல்லூரி அணி அபார வெற்றியைஈட்டிக் கொண்டது.

வடக்கின் நீலங்களின் சமர் வெற்றிக்கிண்ணம் கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் கையில்! Reviewed by Author on May 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.