அண்மைய செய்திகள்

recent
-

சமூகவிரோதிகளின் கூடாரமாக யாழ் மாவட்டம் மாறிவிட கூடாது - இளஞ்செழியன்


யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் சமூக விரோதிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சமூக விரோதச் செயல்களற்ற பிரதேசமாகவும், குற்றச் செயல்களற்ற பிராந்தியமாகவும் உருவாக்குவதற்கு பொலிஸ் ஊடாக நீதிமன்றங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

எனினும் குற்றச் செயல்களும் சமூக விரோதச் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையிலேயே சுன்னாகம், கோப்பாய், மல்லாகம் ஆகிய பகுதிகளில் விசேட பொலிஸ் அணியொன்று சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அத்துடன் வாள்வெட்டு, குழுமோதல், களவு கொள்ளை இடம்பெற்று வரும் மல்லாகம், சுன்னாகம், வட்டுக்கோட்டை, மானிப்பாய், கோப்பாய், அரியாலை, பாசையூர், குருநகர் போன்ற பகுதிகளில் மேலதிக பொலிஸாரை பணியில் அமர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்நிலையிலேயே சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் இரக்கம் காட்டாது கடும் தண்டனை வழங்கும் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

சமூகவிரோதிகளின் கூடாரமாக யாழ் மாவட்டம் மாறிவிட கூடாது - இளஞ்செழியன் Reviewed by Author on May 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.