வெற்றியுடன் சீசனை தொடங்கிய உசைன் போல்ட்...
உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட், 2016ம் ஆண்டு சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.
கரீபியத் தீவுகளில் ஒன்றான கேமான் தீவில் நேற்று முன்தினம் CaymanInvitational என்ற தடகள போட்டி நடந்தது.
இதில் பங்கேற்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டப் பந்தயத்தில் 10.05 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தை பிடித்த அமெரிக்காவின் டென்டாரியஸ் லாக் 7 மைக்ரோ விநாடிகள் கூடுதலாக எடுத்துக்கொண்டார்.
மற்றொரு ஜமைக்க வீரரான கெமர் பெய்லி கோல் 3-ஆவது இடத்தைப் (10.18 விநாடிகளில்) பிடித்தார்.
இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில், இது என்னுடைய சிறந்த ஓட்டம் கிடையாது, எனினும் காயம் ஏதுமின்றி இலக்கை எட்டியிருப்பதுமுக்கியமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆடவர் 100 மீ., 200 மீ., 4100 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்ற போல்ட், இந்தமுறையும் தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்து விட்டு ஓய்வு பெற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெற்றியுடன் சீசனை தொடங்கிய உசைன் போல்ட்...
Reviewed by Author
on
May 16, 2016
Rating:

No comments:
Post a Comment