மட்டக்களப்பு தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் மழை காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் மாணவர்கள், உத்தியோகத்தர்கள், கூலித் தொழிலாளர் தங்களுடைய வேலைகளுக்கு செல்வதற்கு மிகவும் போக்குவரத்து பிரச்சனைக்கு மத்தியில் செல்கின்றனர்.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பயணிப்பவர்களுடன் நிலைமையையும் கேட்டறிந்து கொண்டார்.
இப்பிரதேசத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்குமாறு பிரதேச செயலாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் கோராவெளி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய சடங்கு உற்சவமானது தொடங்கவுள்ளது. இவ்வாலயத்திற்கு இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மக்கள் இவ்வழியால் செல்ல வேண்டும்.
மழை தொடருமாக இருந்தால் ஆலயத்திற்கு செல்வதற்கு மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
Reviewed by Author
on
May 17, 2016
Rating:

No comments:
Post a Comment