அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் உதைபந்தாட்ட சங்க தலைவர் மீது தாக்குதல்! கண்டுகொள்ளாத பொலிஸ் அதிகாரிகள்

வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத் தலைவர் குணரட்ணம் ஜோன்சன் (வயது 48) மீது நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போதும் அவர்கள் மூன்று மணிநேரமாக தாக்குதலுக்குள்ளானவரை கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றில் போட்டி விதிமுறைகளை மீறிச் செயற்பட்டதாக அல்மதார் விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த அணியின் தடையை நீக்குமாறு அரசியல்வாதி ஒருவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கேட்கப்பட்டிருந்தது.

ஆனால் மாவட்ட சங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்ற முடியாது எனவும் ஏற்கனவே வேறு சில கழகங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அவர்கள் ஏற்றுள்ளனர்.

அதனால் தடை உத்தரவை மீளபெற முடியாது என உதைப்பந்தாட்ட சங்கத்தினரால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. நேற்று சனிக்கிழமையும் குறித்த சம்பவம் தொடர்பில் தொலைபேசியில் சங்கத் தலைவருடன் பேசப்பட்டிருந்தது.

அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில் தனது சொந்த தேவை ஒன்றுக்காக வவுனியா, வேப்பங்குளம் பகுதிக்கு சென்ற போது அவரை இடைமறித்த குறித்த அல்மதார் கழகத்துடன் தொடர்புபட்ட சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் கற்களாலும் வீசி தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற சங்கத் தலைவர் தமது சங்க உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களுடன் இணைந்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றுள்ளார்.

இதன்போது தாக்குதல் நடத்தியவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வந்ததுடன் அவர்களும் முறைப்பாடு செய்யப் போவதாக பொலிசாரிடம் தெரிவித்ததையடுத்து தாக்குதலுக்குள்ளான நபரை விடுவித்து தாக்குதல் செய்தவர்களின் முறைப்பாட்டை பொலிசார் பதிவு செய்ததுடன் சுமார் 3 மணித்தியாலமாக அவர்களுடன் கடமையில் இருந்த பொலிசார் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தினர் தமது முறைப்பாட்டை பெற்றுக் கொள்ளுமாறு பொலிசாரிடம் முரண்பட்ட போதும் பொலிசார் அதைனை பதிவு செய்யாது இழுத்தடித்தடித்து அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே செல்லுமாறு விரட்டியுள்ளனர்.

இதன்போது தாக்குதலுக்குள்ளாவனருக்கு உடல்நிலை சோர்வு ஏற்பட்டமையால் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெலிசாரின் குறித்த பக்கச்சார்பான செயற்பாடு குறித்தும், அரசியல்வாதிகளுக்கு சார்பாக பொலிசார் நடந்து கொள்வதாகவும் வவுனியா உதைபந்தாட்ட சங்கம்' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சங்கத் தலைவரை வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம் வந்து பார்வையிட்டதுடன் பொலிசாரின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து கடும் அதிருப்தியையும் வெளியிட்டார்.
வவுனியாவில் உதைபந்தாட்ட சங்க தலைவர் மீது தாக்குதல்! கண்டுகொள்ளாத பொலிஸ் அதிகாரிகள் Reviewed by NEWMANNAR on May 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.