பாலியல் துஷ்பிரயோக வழக்கிலிருந்து விலகுமாறு யுவதியை வற்புறுத்திய நபர்களுக்கு விளக்கமறியல்
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு ஒன்றுடன் தொடர்புபட்ட முறைப்பாட்டாளரான யுவதியினை வழக்கிலிருந்து விலகுமாறு வற்புறுத்திய கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை எதிர்வரும் 6ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் யுவதி ஒருவரை திருமணம் செய்வதாக தெரிவித்து யுவதியை ஏமாற்றிய ஒருவரும் அவரின் துணையுடன் குறித்த யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விடுதி உரிமையாளர் உட்பட நான்கு பேரை கடந்த மாதம் கைதுசெய்த கிளிநொச்சிப் பொலிஸார் குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அதனுடன் தொடர்புபட்ட இரண்டாம் மூன்றாம் சந்தேகநபர்களை பிணையில் செல்லுமாறும் முதலாம் மற்றும் நான்காம் சந்தேகநபர்களை கடந்த புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிணையில் சென்ற இருவர் உட்பட நான்கு பேரையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட முறைப்பாட்டாளர் மன்றில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது மன்றில் குறித்த முறைப்பாட்டாளரான யுவதி, குறித்த வழக்கிலிருந்து தன்னை விலகுமாறு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் அச்சுறுத்தியதாக சட்டத்தரணியூடாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அச்சுறுத்தல் விடுத்த குறித்த மூவரையும் உடனடியாக கைது செய்து நேற்றுமுன்தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி கட்டளையிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து குறித்த மூவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் வழக்குடன் தொடர்புபட்ட முதலாம் நான்காம் சந்தேக நபர்கள் ஆகியோரை எதிர்வரும் 6ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
குறித்த யுவதிக்கு இடம்பெற்ற சம்பவமானது மிகவும் பாரதூரமான ஒரு சம்பவமாகும். எனவே இதனுடன் தொடர்புபட்டவர்கள் அதற்கான தண்டனைகளை எதிர்கொள்வார்கள்.
இந்த வழக்கை அவதானிக்கும் போது தொடர்ந்தும் இதனுடன் தொடர்புபட்ட பலரைக் கைதுசெய்ய வேண்டியுள்ளது. இவ் வழக்கினைக் கொண்டு நடத்துவதற்கு பல இடையூறுகள் காணப்படுகின்றன என நீதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
May 28, 2016
Rating:

No comments:
Post a Comment