அண்மைய செய்திகள்

recent
-

விமான நிலையங்கள் மீது நிகழ்த்தப்பட்ட நூற்றாண்டின் மிக கொடிய 6 தாக்குதல்கள்...


துருக்கி விமான நிலையத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலைப் போன்று உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமான நிலையங்களில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

இஸ்தான்புல் Ataturk விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட அடுத்தடுத்த இரண்டு தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 42 பேர் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 238 பேர் படுகாயமடைந்துள்ளதாக துருக்கி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் 10 பேர் வெளிநாட்டினர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Ataturk விமான நிலையமானது துருக்கியில் அமைந்திருக்கும் மிக பெரிய விமான நிலையமாகும். ஐரோப்பாவின் பரபரப்பான விமான நிலையங்களில் 3-வது இடத்தில் உள்ளது இஸ்தான்புல் Ataturk. கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 61 மில்லியன் மக்கள் இந்த விமான நிலையத்தில் வந்து சென்றுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி பிரஸசெல்ஸ் விமான நிலையத்தில் ஐ.எஸ் ஆதரவு குழுவினரால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகளின் முக்கிய நோக்கம் பயணிகள் வெளியேறும் அறையில் தாக்குதல் நடத்தி இறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே. இதை கருத்தில் கொண்டே தீவிரவாதிகள் இருவர் செயல்பட்டுள்ளனர்.

விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடர் தாக்குதலை நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர். 200 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 23 மில்லியன் மக்கள் இந்த விமான நிலையத்தில் வந்து சென்றுள்ளனர்.

ரஷ்யாவின் Domodedovo சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 170 பேர் படுகாயமடைந்தனர். ரஷ்யர்கள் உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட இந்த கொடூரத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் 20 வயதே ஆன இளைஞன் என்பது தெரிய வந்தது.

உலக அளவில் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் Domodedovo சர்வதேச விமான நிலையம் 12-வது இடத்தில் உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 30 மில்லியன் மக்கள் இந்த விமான நிலையத்தில் வந்து சென்றுள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சியில், ஜின்னா சர்வதேச விமான நிலையம் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயமடைந்தனர். தலிபான் ஆதரவு குழுவினர் நடத்திய இந்த வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் கராச்சி நகரையை உலுக்கியது.

ஆப்கானிஸ்தானின் காந்தகார் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ராணுவ உடையில் புகுந்த தலிபான் தீவிரவாதிகள் விமான நிலையம் மற்றும் அருகாமையில் உள்ள பாடசாலை ஒன்றை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 35க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

விமான நிலையங்கள் மீது நிகழ்த்தப்பட்ட நூற்றாண்டின் மிக கொடிய 6 தாக்குதல்கள்... Reviewed by Author on June 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.