அண்மைய செய்திகள்

recent
-

புத்தக விற்பனை: கோடீஸ்வரர் ஆனார் மலாலா....


தலிபான்களால் தலையில் சுடப்பட்டு உயிர் தப்பிய பாகிஸ்தான் பெண் மலாலா, தனது அனுபவங்களைப் பற்றி எழுதிய புத்தகம் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக கோடீஸ்வரராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 வயதாகும் மலாலா, பிரிட்டனில் வசித்து வருகிறார்.

பாகிஸ்தானில் அவர் இருந்தபோது பெண் கல்விக்காக அவர் குரல் கொடுத்து வந்த காரணத்தால் தலிபான் பயங்கரவாதிகள் அவரது தலையில் சுட்டனர்.

எனினும், பிரிட்டன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மலாலா, அதிருஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

அதையடுத்து, பெண் கல்வி குறித்து அவர் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அவருக்கு 2014-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது அனுபவங்கள் குறித்து "ஐ யாம் மலாலா' என்ற புத்தகத்தை அவர் எழுதினார்.

அவரது வாழ்க்கை வரலாற்று பதிப்புரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2015 லட்சம் பவுண்டாக (சுமார் ரூ.15 கோடி) இருந்தது.

மேலும் அது 11 லட்சம் பவுண்ட் (சுமார் ரூ.7.4 கோடி) லாபம் ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது.

மலாலாவின் புத்தகங்கள், சொற்பொழிவுகளைப் பயன்படுத்துபவர்கள் இந்த நிறுவனத்துக்கு பதிப்புரிமைத் தொகை செலுத்துவதன் மூலம் அந்த நிறுவனம் வருவாய் ஈட்டி வருகிறது.

மலாலா மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தக விற்பனை: கோடீஸ்வரர் ஆனார் மலாலா.... Reviewed by Author on June 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.