1000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் அழிந்து போயுள்ளன!
கொஸ்கம- சாலாவ இராணுவ முகாமில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட வெடிவிபத்தில், 1000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் அழிந்து போனதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தினால், 9 ஆயிரம் தொன் வெடிபொருட்கள் முற்றாக நாசமாகின.
இதன் பெறுமதி 10 பில்லியன் (1000 கோடி) ரூபாவாகும்.
இந்த வெடிபொருள் கிடங்கு சரியான நிபுணத்துவத்துடன் அமைக்கப்படவில்லை என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொஸ்கம உப ஆயுதக் கிடங்கு, 1990களின் தொடக்கத்தில்- சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
போரின் போது, இங்கு 20 ஆயிரம் தொன் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
அதில் பாதி, பின்னர் வியாங்கொட உப ஆயுதக் கிடங்குக்கு மாற்றப்பட்டது என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
1000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் அழிந்து போயுள்ளன!
Reviewed by NEWMANNAR
on
June 07, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 07, 2016
Rating:


No comments:
Post a Comment