நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த வடமராட்சி மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு....
வெளி மாவட்டத்தில் இருந்து அத்துமீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களினால், அந்தப் பகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
வடமராட்சி கடல்பகுதியில் கரைவலை மற்றும் ஏனைய வலைகள் மூலம் தொழிலில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்களின் வலைகள், அத்து மீறி தொழிலில் ஈடுபடுகின்ற வெளிமாவட்ட மீனவர்களின் செயற்பாட்டால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு வந்தன.
மிக நீண்ட காலங்களாக நிலவி வந்த இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இணைந்து மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்று சந்திப்பொன்றை நடத்தினர். இதில் வடமராட்சி மீனவர் சங்க, சமாச மற்றும் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் வெளி மாவட்ட மீனவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தெளிவாக எடுத்து விளக்கினர். அதனை வெளி மாவட்ட மீனவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன்,
வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்து கடலட்டை தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீன்பிடி அமைச்சினால் வழங்கப்பட்டவாறு ஐந்து கடல் மைல் தொலைவிற்கு அப்பாலும், அதேவேளை இரவு வேளைகளில் இந்த தொழிலினை மேற்கொள்ள முடியாது என்ற இணக்கப்பாட்டுடன் இப்பிரச்சினைக்கு சுமூகமான ஒரு தீர்வு எட்டப்பட்டது. எதிர் காலத்தில் இப்படியான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு வடமராட்சி மீனவர்கள் இந்த கடலட்டை பிடிக்கும் தொழிலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை தான் விரைவாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார் .
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், கடற்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரி ஆகியோர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த வடமராட்சி மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு....
Reviewed by Author
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment