அண்மைய செய்திகள்

recent
-

மெஸ்ஸிக்கு சிலை வைத்து கௌரவித்த அர்ஜென்டினா மக்கள்: முடிவை மாற்றிக்கொள்வாரா?


உலகில் அதிக ரசிகர்கள் கொண்ட வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா கால்பந்து அணித்தலைவருமான லயோனல் மெஸ்ஸி தனது ஓய்வை அறிவித்த இரண்டே நாட்களில் அர்ஜென்டினா மக்கள் மெஸ்ஸியின் வெண்கல சிலை திறந்து அவரை கௌரவித்துள்ளனர்.

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிபோட்டியில் சிலி அணியிடம் அர்ஜென்டீனா தோல்வியடைந்தது , இத்தோல்வியால் ஏற்றுக்கொள்ள முடியாத மெஸ்ஸி சர்வதேசபோட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அர்ஜென்டினா தலைநகர் Buenos Airesயில் அவரது வெண்கலசிலை திறக்கப்பட்டிருக்கிறது. பியூனஸ் அயர்ஸ் நகரத்தின் மேயர் இச்சிலையை திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், மெஸ்ஸி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும், அவர் நிச்சியமாக எதிர்வரும் 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலக கிண்ணத்தில், அர்ஜென்டினாஅணியை வழி நடத்தி வெற்றிகரமாக கிண்ணத்தை கைப்பற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என கூறியுள்ளார்.

மெஸ்ஸிக்கு சிலை வைத்து கௌரவித்த அர்ஜென்டினா மக்கள்: முடிவை மாற்றிக்கொள்வாரா? Reviewed by Author on June 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.