அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பள்ளிமுனையில் இருந்து பெண்ணின் குரல்---எனது கணவரை மீட்டுத்தாருங்கள்....


நல்லாட்சி அரசாங்கத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள கடத்தல் நிகழ்வுகள்
யாரை நம்புவது நாம் எங்கு உள்ளோம் மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனைக்கிராமத்தில் வசித்து வந்த  பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.அன்ரன் டெனி(வயது-38) கடத்தப்பட்டுள்ளதாக என தெரியவந்தள்ளது.

குறித்த குடும்பஸ்தர் உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் கடமையாற்றி வந்த நிலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஆலய பங்கு பணிமனையில் வைத்து கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தரை புலனாய்வுத்துறையினர் என தங்களை அறிமுகப்படுத்திய சிலர் அண்மைக்காலமாக மன்னார் பள்ளிமுனையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தல்களை விடுத்து வந்த நிலையில் கடந்த 1ம் திகதி மீண்டும் புலனாய்வுத்துறையினர் என தம்மை அறிமுகப்படுத்திய சிலர் காணாமல் போன குடும்பஸ்தரின் வீட்டிற்குச் சென்று அவர் தொடர்பில் விசாரித்துள்ளனர்.


இந்த நிலையிலே குறித்த குடும்பஸ்தர் நேற்று புதன்கிழமை அதிகாலை ஆலய பங்கு பணிமனையில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.குறித்த நபரின் மனைவி ஆ.மதுவந்தி அவர்கள் எமது நியூமன்னார் இணையத்திற்கு தகவல் தருகையில் எனது கணவர் கடத்தப்பட்டுள்ளார்.
நான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோன். அத்தோடு மன்னார் மாவட்டத்தில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகளான....
  1. CHRD
  2. HRC
  3. HHR
  4. NWDS
  5. மன்னார் பிரஜைகள் குழு 
எனது பிரச்சினையை பதிவு செய்துள்ளேன் மேலும் எனது கனவர் தொடர்பாக  அறியத்தருவது என்னவெனில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு அவரால் எந்த விதமான வேலையும் செய்யமுடியாத நிலையிலேயே சென் பீற்றர் ஆலயத்தில் இதரபணிகளை செய்து வந்த வேளையிலேயே கடத்தப்பட்டுள்ளார்.
மூன்று பெண்குழந்தைகளினதும் எனது இக்கொடிய துன்பநிலையில் என்னை காப்பாற்ற எனது கனவரை  மன்னாரின் பொது அமைப்புக்களான உங்களிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சாள்ஸ் அண்ணணிடமும் மாகாண அமைச்சர் ப.டெனிஸ்வரன் அவர்களிடமும் தொலைபேசியிலும் நேராகவும் சந்தித்ததோடு  அமைச்சர் முதலமைச்சர் அவர்களிடமும்  எனது விண்ணப்பத்தினை  நியூமன்னார் இணையத்தின் வாயிலாக முன்வைக்கிறேன் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்......

இரண்டு நாட்களாகியும் இன்னும் எனது கணவரை காணாது நான் படும் துன்பத்தினைவிட எனது குழந்தைகள் படும் துன்பத்தினை வார்த்தையில் சொல்லிவிட முடியாது......!!!!!

இந்த நிலையில் தனது கணவன் கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக அவரது மனைவி தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும், குறித்த சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார் பள்ளிமுனையில் இருந்து பெண்ணின் குரல்---எனது கணவரை மீட்டுத்தாருங்கள்.... Reviewed by Author on June 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.