வாய்க்காலில் கட்டப்படும் வீடு…வாய நீ மூடு…தர்க்கத்தில் ஈடுபடும் சாந்திபுர மக்கள் ----ஆவணங்கள் படங்களாக இணைப்பு.....
மன்னார் மாவட்டத்தில் பல பிரச்சினைகள் சமுர்த்தி தொடங்கி சுயதொழில் அபிவிருத்தி ஏனைய அரச தனியார் கொடுப்பனவுகள் நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை என்ற முறைப்பாடுகள் உள்ளது.
தற்போது பெரும் பிரச்சினையாகியுள்ள விடையம் காணிப்பிரச்சினையே காரணம் இந்த விட்டுத்திட்டம் வந்ததில் இருந்து காணியுள்ளவர்களுக்குதான் வீட்டுத்திட்டம் என்பதால் எங்கெங்கு அரசகாணிகள் உள்ளதோ அவ்விடத்தில் சிறு கொட்டிலை அமைத்து அதில் சிறிது காலம் இருந்து கொண்டு அதற்கு உறுதி முடித்துகொள்ளுதலும் இப்படியான வீட்டுத்திட்டங்கள் வரும் போது பதிந்து வீட்டுத்திட்டங்கள் பெற்று வந்தவர்கள் தற்போது வந்துள்ள வீட்டுத்திட்டத்தினை பெற்றுக்கொள்வதற்கான காணிகள் இல்லாததினால் கழிவு நீர் ஓடுகின்ற வாய்க்கால்கள் குப்பைமேடுகளையும் சிறுவர்பூங்காக்களையும் விட்டு வைக்கவில்லை தங்களுக்கு விரும்பிய அளவில் பிடித்து அடைத்து கொண்டு அங்கு குடியேறி விடுகின்றார்கள்.
அவ்வாறதொரு பிரச்சினைதான் தற்போது கிளம்பியுள்ளது சாந்திபுரத்தில் மிகவும் பழமையான வாய்க்காலான அதுவும் பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் இருந்தே பாவிக்கப்பட்ட மருதோடை வாய்க்கால் வழியாகவே தாராபுரம் இருந்து மழைவெள்ளம் கழிவு நீரானது சாந்திபுரமூடாக வந்து கடலில் கலக்கின்றது. இந்த வாய்க்காலானது புனரமைக்கப்படாமல் இருந்ததால் 2007ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாந்திபுர மக்கள் இடம்பெயர்ந்த சம்பவம் அறிந்த விடையமே…
2007 புனரமைப்பு செய்யப்பட்டு 10 அடி வாய்க்காலாக இருந்ததை இருபக்கமும் 5அடி அகலமாக்கி திருத்தியமைக்கப்பட்டது. அப்படியிருந்தும் கடந்த காலங்களில் பெய்த மழைவெள்ளத்தினாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கும் ஆளாகின்றவேளை தற்போது அந்த வாய்க்காலிலே நடுப்பகுதியில் இரண்டு நபர்கள் அடாத்தாக முறைகேடான முறையில் காணியை பிடித்து அத்திவாரம் போடுகின்றவரைக்கும் களத்தில் இறங்கியுள்ளதால் ஊருக்குள் கிராமத்தவர்களுக்கு இடையில் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது…
மன்னாரில் சும்மாவே மழை வெள்ளம் என்றால் எல்லோர் வீடுகளிலும் வெள்ளம் இப்படியான செயற்பாடுகளால் சாந்திபுரக்கிராமம் பெரும் அழிவிற்கு உள்ளாகப்போகின்றது.
காணிவழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது இவ்வாறு முறைகேடாக காணிகளை பிடிப்பதற்கும் வீடுகளை அமைப்பதற்கும் யார் அனுமதியளிக்கின்றார்கள் இந்தப்பிரச்சினைக்கு பின்னால் சில அதிகாரிகளின் செயற்பாடு உள்ளதால் பொறுப்பான பல அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்களுக்கும் வடமாகாண காணி ஆணையாளர் அவர்களுக்கும் மகஜர் கையளித்தபோதும் இதுவரை எந்தவகையான சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது.
தற்போது காணி தொடர்பான அதிகாரிகள் தங்களிடம் தான் எல்லா அதிகாரமும் உள்ளது போல் செயற்படுகின்றார்கள். இப்படியே தொடர்ந்தால் எமது சாந்திபுர மக்களின் நிலமை மழைக்காலங்களில் மிகவும் மோசமான நிலையினை அடைவதோடு குடிபெயர்வதைத்தவிர வேறு வழியிருக்காது ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இவ்விடையத்தில் அக்கறை கொண்டு இவ்வாறான முறைகேடான காணிபிடிப்பிற்கு சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் அதேநேரம் இனிஇவ்வாறான பிரச்சினைகள் வராமல் பாரத்துக்கொள்ளவேண்டும்.
-மன்னார்புயல் -

வாய்க்காலில் கட்டப்படும் வீடு…வாய நீ மூடு…தர்க்கத்தில் ஈடுபடும் சாந்திபுர மக்கள் ----ஆவணங்கள் படங்களாக இணைப்பு.....
Reviewed by Author
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment