தமிழ் மொழியால் தடுமாறிய பாராளுமன்றம்!
இலங்கை நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் நேற்று தமிழ் மொழியில் நடைபெற்றது. இதனால் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தடுமாற்றம் அடைந்ததாக தெரிய வருகிறது.
நேற்றைய தினம் சபைக்குத் தலைமை தாங்கியிருந்த பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தனது பெரும்பாலான அறிவிப்பு மற்றும் கட்டளைகளை தமிழ் மொழியிலேயே பிறப்பித்திருந்தார்.
அத்துடன், இடைக்கிடையே ஆங்கிலம் மற்றும் சிங்களம் கலந்த அறிவிப்புகளையும் விடுத்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திகைத்து போயிருந்தனர்.
இந்நிலையில், சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வாய்மூல வினா விடைக்கான நேரம் ஆரம்பமானது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவை கேள்விகளை கேட்பதற்காக அழைத்த போது அவர் சபையில் தடுமாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவின் தடுமாற்றத்தினை கண்டு ஆளும் தரப்பு உறுப்பினர்களும் சிரித்து விட்டனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விவகாரம் சபையில் சூடுபிடித்திருந்த நிலையில், குழுக்களின் பிரதித்தலைவர் ஏதோவொரு உத்தரவை பிறப்பித்தார்.
இதன்போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, 'உங்களுக்கென்ன பைத்தியமா, உங்களுக்கென்ன பைத்தியமா' என கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியால் தடுமாறிய பாராளுமன்றம்!
Reviewed by Author
on
June 22, 2016
Rating:

No comments:
Post a Comment