அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (27-07-2016) கேள்வி பதில்

கேள்வி பதில் -வாசகர்களுக்கான  அறிவித்தல்   

எமது மன்னார் இணையத்தில் தினமும் வெளிவரும் வாசர்களுக்கான கேள்வி பதில் - பகுதி இனிமேல் வாசர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வாரத்தில் மூண்று நாட்கள் பிரசுரிக்கப்பட உள்ளது .
ஞாயிறு ,புதன் மற்றும் வெள்ளி நாட்களில் பிரசுரிக்க படும் என்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம் .

---------------------------------

கேள்வி:− மதிப்பிற்குரிய சட்டத்தரணி சுதன் அண்ணா.நான் கதிர்காமத்திலிருந்து யோகராசா.காணியை நீண்ட கால ­குத்­த­கையில் பெற்ற ஒருவர் இறந்தால் அக்­கா­ணியின் உரிமை அடுத்து யாருக்கு போய் சேரும்?

பதில்:− அன்பான சகோதரரே!அரச காணிச்­சட்டம் பிரிவு 11 இற்­க­மைய "இறந்தவருடைய வாரி­சு­க­ளுக்­கு­ரி­மை­யாகும்".வாரி­சு­க­ளுக்குள் பிணக்­கி­ருந்தால் பிர­தேச செய­லாளர் சமா­தா­ன­மாக தீர்க்க முயற்­சிக்க வேண்டும்.இல்­லையேல் பிரி­விடல் ஆதன வழக்கு (பூதல் வழக்கு) வைத்து இவ் ஆத­னத்தின் உரி­மையை வாரி­சு­க­ளுக்­கி­டையே நீதி­மன்ற தீர்ப்­புக்­க­மைய தீர்­மா­னித்து அதன்­படி அவ்­வா­ரிசு புதி­தாக காணி ஒன்றை எடுக்கும் முறைப்­படி சகல ஆவ­ணங்­க­ளையும் சமர்ப்­பிக்க வேண்டும்.
குறிப்­பாக பின்­வரும் ஆவ­ணங்கள் மேல­தி­க­மாக சமர்­ப்பிக்க வேண்டும்.
1-முன்­னைய நீண்­ட­கால குத்­தகை உரி­மை­யா­ளரின் இறப்­புப்­ப­திவு
2. -இவர் மகன்,மகள் என்றால் பிறப்­புப்­ப­திவு.
3-. வர­லாற்றுச் சுருக்கம(காணி வரலாறு) பதி­வாளர் காரி­யா­ல­யத்தில் பெற்று அனுப்­புதல்
4-. மனைவி என்றால் திரு­ம­ணப்­ப­திவு
5. -பிணக்­கில்லை என்றால் சகல பிள்­ளைகள், மனைவி சம்­மதம் எழுத்தில் பிர­தேச செய­லாளர் பெற­வேண்டும். அத்­துடன் ஏனைய நீண்­ட­கால குத்­த­கைக்­கு­ரிய சகல ஆவ­ணங்­களும் காணி ஆணை­யாளர் நாய­கத்­திற்கு அனுப்ப வேண்டும்.அடுத்­து­ரிமை செய்ய இருப்போர் தொடர்­பாக புதிய நீண்­ட­கால குத்­த­கையே வழங்­கப்­படும்
இன்றைய (27-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.