அண்மைய செய்திகள்

recent
-

உணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 கிலோ எடை கொண்ட குழந்தை....


மராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அதன் எடை அதிகரித்து கொண்டே வருவதால் பெற்றோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மராட்டிய மாநிலத்தின் புனே மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தையான ஸ்ரீஜித், லெப்டின்(ஹார்மோன் சிதைவு) என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இருந்து எடை கணிசமாக உயர்ந்து கொண்டே வருவதாகவும், ஆரம்பத்தில் 4 கிலோ எடை இருந்த குழந்தை தற்போது 22 கிலோவாக அதிகரித்துள்ளது.

மேலும் ஸ்ரீஜித் அளவுக்கு அதிகமாக உணவு உண்பார் எனவும் உணவு தர மறுத்தால் அடம்பிடித்து தனது வயிற்றை நிரப்புவார், இதன் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் மற்றும் எழுந்து நடக்க முடியாத அளவுக்கு அவரது உடல் அதிகமாகி விட்டது.

இதனால் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதாவது இந்நோயை குணப்படுத்துவதற்கு இந்தியாவில் மருந்து இல்லை என்பதால் இங்கிலாந்தில் இருந்து அதிக பொருட்செலவில் மருந்துகள்(விலை உயர்ந்த ஊசி) வரவழைக்கப்பட்டுள்ளன.இந்த விலை உயர்ந்த ஊசியை குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை செலுத்தி வருகின்றன.

இந்த ஊசி குழந்தையின் பசியை ஒரளவுக்கே கட்டுப்படுத்துகிறது, மேலும் குழந்தைக்கு இதே நிலை நீடித்தால் பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது,அதனால் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

உணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 கிலோ எடை கொண்ட குழந்தை.... Reviewed by Author on July 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.