அரசசார்பற்ற ஒன்றியங்களின் தலைவராக சபாரத்தினம் சிவயோகநாதன் தெரிவு...
மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற ஒன்றியங்களின் அமைப்பான இணையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு இன்று நடைபெற்றது.
எகட் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை டிரோன் டிலிமா அவர்களின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் மட்டக்களப்பு இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாவட்டத்தின் கடந்தகால பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்திகள் குறித்தும் பேசப்பட்டன. இதில் 2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
இணையத்தின் 2017ம் ஆண்டுக்கான புதிய தலைவராக சபாரத்தினம் சிவயோகநாதன் செயலாளராக ச.நிரோசன் பொருளாளராக டி.தயானந்தன் உப தலைவராக திருமதி.சோமாவதி சுப்பிரமணியம் உப செயலாளராக ஏ.எல்.எம்.அலிம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் இணையத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டன.
Sabarathnam Sivayoganathan selected for Batticaloa NGOs Union head
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 32 உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
2002ம் ஆண்டு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இணையம் அமைப்பானது மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குரலாக செயற்பட்டுவருவதுடன் மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும் முன்நின்று செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசசார்பற்ற ஒன்றியங்களின் தலைவராக சபாரத்தினம் சிவயோகநாதன் தெரிவு...
Reviewed by Author
on
July 31, 2016
Rating:

No comments:
Post a Comment