விடுதலைப்புலி ஆதரவாளர்கள் குறித்து விழிப்பு அவசியம்!
விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் படையினர் விழிப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல், மிலிந்த பீரிஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
படையினருக்காக இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் தீவிரவாதிகளின் கையோங்கி வருகிறது. எனவே அதற்கு எதிரான நவீன முனைப்புக்கள் தேவை என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இன்னமும் விடுதலைப்புலிகளின் சிந்தாந்த கருத்துக்களை பரப்பிவருகின்றனர்.
அத்துடன் இலங்கையின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு எதிரான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றனர்.
எனவே தீவிரவாதத்துக்கு சவால்விடும் அளவில் புத்திக்கூர்மையுடன், எதிர்காலத்தில் செயற்பட வேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலி ஆதரவாளர்கள் குறித்து விழிப்பு அவசியம்!
Reviewed by Author
on
July 27, 2016
Rating:

No comments:
Post a Comment