மீள்குடியேற்றத்தினை மறக்கவில்லை - விக்னேஷ்வரன்....
முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களுடைய மீள்குடியேற்றத்தில் காலதாமதம் ஏற்பட்டிருந்தாலும் அம் மக்களுடைய மீள்குடியேற்ற பிரச்சினையை நான் மறந்துவிடவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
மீள்குடியேற்றம் தொடர்பாக எடுக்கவேண்டிய சகல நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.
காலதாமதம் உண்டாகியமைக்கு சில காரணங்கள் உள்ளன. குறிப்பாக படையினர் வசம் உள்ள காணிகளை அடையாளம் காண்பது மற்றும் அவற்றின் தகவல்கள் அறிவது போன்ற விடயங்களே பிரதான காரணங்களாக அமைந்திருக்கின்றன.
இது தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் தம்மால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண முதலமைச்சரின் அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் வாழ்ந்த மக்கள் போருக்கு பின்னர் அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்படாமல் மாற்று நிலம் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு சொந்தமான 524 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் படையினருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது.
கேப்பாபிலவு மக்கள் தங்களுடைய நிலங்களில் தங்களை மீள்குடியேற்றுமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்ததுடன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடமும் இந்த கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர்கள் 3 பேர் கொண்ட விசேட குழு ஒன்றை நியமித்து இந்த மீள்குடியேற்றப் பிரச்சினை தொடர்பான அறிக்கை ஒன்றை பெற்றிருந்து அந்த அறிக்கையின் பிரகாரம் 3மாதங்களுக்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்படும். எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனாலும் முதலமைச்சர் வழங்கிய 3மாதகால அவகாசத்திற்குள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக கடந்த 19ம் திகதி கேப்பாபிலவு மக்கள் தங்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த தயாரான நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன் தலையிட்டு இம்மாதம் இறுதி வரையில் கால அவகாசம் கேட்டிருந்தமையால் போராட்டம் கைவிடப்பட்டது. போன்றவையும் அவ் அறிக்கையில் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, கேப்பாபிலவு மக்கள் தங்களுடைய மீள் குடியேற்றத்திற்காக அடுத்த கட்டபோராட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்,
மீள்குடியேற்றத்தினை மறக்கவில்லை - விக்னேஷ்வரன்....
Reviewed by Author
on
July 27, 2016
Rating:

No comments:
Post a Comment