உயர்தரப் பரீட்சைக்கான நுழைவுச்சீட்டு அனுப்பும் பணிகள் ஆரம்பம்....
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு நுழைவுச்சீட்டு அனுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான நுழைவுச்சீட்டுக்கள் பாடசாலைகளுக்கும், தனியார் பரீட்சார்த்திகளுக்கான நுழைவுச்சீட்டுக்கள் தனிப்பட்ட முகவரிகளுக்கும் நேற்று காலை அனுப்பி வைக்கப்பட்டதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
நுழைவுச்சீட்டுக்களை உடனடியாக மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
நுழைவுச்சீட்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது குறித்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக பரீட்சை திணைக்களத்தின் பரீட்சை ஒழுங்கமைப்பு கிளைக்கு அறிவித்து திருத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கான நுழைவுச்சீட்டு அனுப்பும் பணிகள் ஆரம்பம்....
Reviewed by Author
on
July 06, 2016
Rating:

No comments:
Post a Comment