அண்மைய செய்திகள்

recent
-

"தற்கொலைத் தாக்குதல் நடத்துவோம்'' - அசாத் சாலி முஸ்லிம்களுடன் போரிடத் தயார்! - பொது பல சேனா

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை தற்கொலை தாக்குதல் நடத்தி கொலை செய்ய வேண் டும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்திருந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் உறுப்பினரான மாகல் கந்தே சுதந்த தேரர், தேவைப்பட்டால் முஸ்லிம்களுடன் போரிடுவதற்கு சிங்களவர்கள் தயாராக இருப்பதாகவும் சூளுரைத்துள்ளார்.

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை தற்கொலைத் தாக்குதல் நடத்தி கொலை செய்ய வேண்டும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி அண்மையில் நடைபெற்ற ஊட கவியலாளர் மாநாட்டில் உரையாற்றியபோது கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அசாத் சாலியை கைது செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர்களான மாகல்கந்தே சுதந்ததேரர் மற்றும் விரிவுரையாளரான நிலந்த வித்தானகே ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று முறையிட்டனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாகல்கந்தே சுதந்ததேரர், அசாத் சாலிக்கும் முஸ்லிம் கவுன்ஸிலிற்கும் சிங்களவர்கள் என்றும் பயந்தவர்கள் இல்லை என கடுந்தொனியில் அச்சுறுத்தினார்.
மேலும் அசாத் சாலியின் இவ்வாறான கருத்தினால் பௌத்த மக்கள் பெரும் கவலையடைகின்றனர்.
எனவே அசாத் சாலியை கைது செய்யு மாறு கோரியே பொலிஸ் தலைமையகத் திடம் முறையிட்டுள்ளோம். அ

சாத் சாலி ஜனாதிபதியின் ஆலோசகராக செயற்பட்டு வருவதோடு பௌத்த மக்களின் மனதை புண்படுத்தக்கூடியதும் தேரர் ஒருவருடைய பெயரை பயன்படுத்தி தற்கொலைத் தாக்கு தல் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தலான வார் த்தையையும் பிரயோகித்திருக்கிறார்.

எனினும் நாம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை என்பதை அசாத் சாலிக்கும், முஸ்லிம் கவுன்ஸிலிற்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். அவரவருக்கு விருப்பமான அறிவிப்புக்களை விடுத்து எங்களை கட்டுப் படுத்த முடியுமென அவர்கள் நினைக்கின்றார்கள்.

எம்முடன் அவர்களுக்கு மோதல் ஒன்று தேவைப்பட்டால் அதற்கும் நாங்கள் தயார் என்பதை அறிவித்துக் கொள்கிறோம். அந்த மோதலுக்கு இந்நாட்டு சிங்களவர்களும், பிக்குமார்களும் தயாராகவே இருக்கின்றார் கள். எனவே அசாத் சாலி தொடர்பான இந்த முறைப்பாட்டை பொலிஸ்மா அதிபர் கருத்திற்கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் என சுதந்த தேரர் குறிப்பிட்டார்.
"தற்கொலைத் தாக்குதல் நடத்துவோம்'' - அசாத் சாலி முஸ்லிம்களுடன் போரிடத் தயார்! - பொது பல சேனா Reviewed by NEWMANNAR on July 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.