அண்மைய செய்திகள்

recent
-

ஓங்கி குத்துவிட்ட மகன்...உயிரை விட்ட தந்தை: அவுஸ்திரேலியாவில் பயங்கரம்....


அவுஸ்திரேலியாவில் மகன் ஒருவர் தனது தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Brisbane நகரை சேர்ந்த Mark English (53) என்பவரது மகன் Morgan Isles-English (25), இவர்கள் இருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சிறுபிரச்சனை காரணமாக ஒருவரையொருவர் சந்தித்து பேசாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 4 ஆம் திகதி Brisbane நகரில் உள்ள ஒரு ரோட்டில் வைத்து இருவரும் சந்தித்துக்கொண்டபோது, பேசிக்கொண்டனர், அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற மகன், தனது தந்தையின் வாயில் ஓங்கி குத்துவிட்டுள்ளார்,

இதில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே கீழே சரிந்த தந்தையை, மகனே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார், சுயநினைவை இழந்த தந்தை 24 மணி நேரத்திற்கு பின்னர் உயிரிழந்தார்.

இந்த கொலை குற்றத்திற்காக மகனை கைது செய்த பொலிசார் அவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர், ஆனால் விசாரணையில் எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில், அந்நபரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


நீதிமன்றத்திற்கு வெளியே அந்நபர் நின்றிருந்தபோது, அவரது தாயாரை பார்த்து அந்நபர், அம்மா நான் உங்களை நேசிக்கிறேன் என கத்தியுள்ளான், இதற்கு பதிலாக தாயாரும் நானும் உன்னை நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனை பார்த்த பத்திரிகை நிருபர்கள், தாயாரிடம் கொலை தொடர்பான கேள்விகளை கேட்டபோது, அவர் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்றுள்ளார்.
தற்போது, இந்த வழக்கு விசாரணை ஆகஸ் 15 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓங்கி குத்துவிட்ட மகன்...உயிரை விட்ட தந்தை: அவுஸ்திரேலியாவில் பயங்கரம்.... Reviewed by Author on July 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.