இன்றைய (12-07-2016) கேள்வி பதில்
கேள்வி:−
பெரும் மதிப்பிற்குரிய வழக்கறிஞர் சுதன் ஐயா!நான் மகேஸ்வரி.கொழூம்பு(×−×−×)இல் வசிக்கிறேன்.ஐயா நான் ஐந்து வருடத்திற்கு முன்பு 4 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தேன்.ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து ஒப்பந்தத்தைப் புதுப்பித்து வருகிறேன்.ஒப்பந்தம் முடிந்து வீட்டை காலி செய்யலாம் என்றபோது புதிதாக பெயின்ட் அடிக்க, கழிவுநீர் வெளியேற்ற என 25,000/-ஐ வீட்டுச் சொந்தக்காரர் பிடித்தம் செய்துகொண்டார்.அத்துடன் மீதமுள்ள பணத்தையும் ஆறு மாதம் கழித்து தருகிறேன் என்கிறார்.குத்தகை பணத்தை வாங்காமல் வீட்டை விட்டு போவது சரிதானா?விரைவாக நான் பணத்தைப் பெற ஏதாவது வழி இருக்கிறதா?
பதில்:−
அன்பான சகோதரியே!நீங்கள் பணத்தைத் திரும்ப வாங்காமல் வீட்டை காலி செய்யாதீர்கள். ஒப்பந்தத்தில் குறிப்பிடாமல் பணம் பிடித்திருந்தால் அதையும் நீங்கள் திரும்பப் பெற முடியும்.இதற்கு வழக்கறிஞர் மூலமாக வீட்டின் உரிமையாளருக்கு நீங்கள் நோட்டீஸ் அனுப்பலாம்.அதற்கும் வீட்டு உரிமையாளர் சாதகமான பதிலினை தராவிடின் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து,உங்களின் பணத்தையும் நீதிமன்றம் மூலமாகத் திரும்பப் பெறலாம்.
குறிப்பு
உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.
கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .
இன்றைய (12-07-2016) கேள்வி பதில்
Reviewed by NEWMANNAR
on
July 12, 2016
Rating:

No comments:
Post a Comment