அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (17-07-2016) கேள்வி பதில்

கேள்வி:−
             வணக்கம் சட்டத்தரணி சுதன் தம்பி!நான் மொனராகலயிலிருந்து அருந்ததீ.தம்பி நான் ஓய்வு பெற்ற இசை ஆசிரியை.தம்பி எனது பேரப்பிள்ளைக்கு வயது 08.அவன் இருந்தால் போல் தெய்வம் வந்தது போல ஆடுகிறான்,பேசுகிறான்,இரத்த பலி கூட கேட்கிறான்.இதை பூசாரிகளிடம் கொண்டு போய் சரி பண்ணலாமா?அல்லது..வேறு வழி ஏதாவது உண்டா?

பதில்:−
அன்புத் தாயாரே! தங்களுடைய பேரனுக்கு வந்திருப்பது"ஆட்டோ ஹிப்னாசிஸ்"அல்லது ‘ட்ரான்ஸ்’ எனப்படும் ஆழ் மனநிலை நோயாகும்.இது ஒரு வித மனநிலை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த ‘சாமி ஆடல்’ உண்டாகும். மிகுந்த ஈடுபாட்டுடன் ஒரு குறிப்பிட்ட பொருள் மீது கவனத்தை ஒருமுகச் செலுத்துவதால் (கென்சன்ட்ரேஷன்) ஏற்படும் நிலையைத்தான்"ட்ரான்ஸ்" என்கிறோம்(இதனை முன்பு விளக்கமாக கூறியுள்ளேன்)
தனக்குத்தானே அதிகபக்தி உள்ளது, தன்னுடன் கடவுள் பேசுகிறார் என்று தன்னைத்தானே நம்ப வைத்துக்கொள்ளும் நிலையைத்தான் "ஆட்டோ ஹிப்னாசிஸ்"என்று சொல்லுகிறோம்.நண்பர்களுடன் அல்லது தனியாக தெய்வம் ஆடுவதை போல தனது ஆழ் மனதில் பதித்து விளையாடுவதனால்,அல்லது மனதில் நினைத்து உருவகிப்பதனால் இத்தகைய நிலை தங்கள் பேரனுக்கு வந்திருக்கிறது...பரீட்சை நன்றாக எழுதாவிட்டாலும், ‘நான் திறமையாக எழுதியும் என்னை ஃபெயிலாக்கி விட்டார்கள்’ என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்வதும் கூட இம்மாதிரியான மனநிலையை அடிப்படையாகக் கொண்டது தான். எனவே ‘சாமி ஆடுதல்’ என்பதும் ஒரு வகையான மனநோயே!..
தாங்கள் இசைத்துறை ஆசிரியை என்பதனால் தாங்கள் இசையில் இலயத்திருக்கும் அனுபவத்தை பெற்றிருப்பீர்கள்.அந்த சாயல்(ஆர்வம்)தங்களுடைய பேரனுக்கும் இருக்க வாய்பிருக்கும்.அதனால தங்கள் பேரனை இசையில் இலயத்திருக்க பழக்குங்கள்,ஆழ் நிலை தியானத்தில் அறிவு,இசை சார்ந்த விடயங்களை போதியுங்கள்.தனிமையில் அல்லது தவறான நண்பர்களுடன் "தெய்வமாடுதல்"விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதீர்கள்.காலப் போக்கில் தங்கள் பேரன் மாற்றமடைவான்.
இன்றைய (17-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.