மன்னார் நகரப்பகுதியில் மணிக்கூட்டு கோபுரம் Clock Tower கட்ட அனுமதி மறுப்பு….மக்கள்…….கொதிப்பு
மன்னார் மாவட்டத்தில் தற்போது பலவகையான அபிவிருத்திப்பணிகள் நடைபெற்று வருகின்றது சந்தோஷம் ஆனாலும் சில அபிவிருத்திப்பணிகள் தாமதமாகவும் தரமில்லாமையாலும் நடைபெறுவதாகவும் மக்கள் கவலை கொள்கின்றனர் காரணம் காலம் கடந்து தற்போதுதான் அபிவிருத்திப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை மன்னார் மாவட்டத்தின் வளர்ச்சிப்பாதையில் செல்லுகின்றது மனமகிழ்ச்சியானாலும் ஆரோக்கியமான அபிவிருத்திப்பணிகள் நடைபெற்றால் எமது மகிழ்ச்சி நிலையானதாக அமையுமல்லவா….
கடந்த வருடம் மன்னார் நகரசபைச்செயலாளர் அவர்களினால் மன்னார் நகர சபைச் பருவகாலகடைத்தொகுதி வழங்கிய வருமானத்தில் இருந்து மன்னாரில் உள்ள அமைப்புக்களினதும் மக்களினதும் கலந்தாலோசித்தபின்பு மன்னார் நகரப்பகுதிக்கு நூலகம் பொதுமைதானம் அபிவிருத்தி செய்தபின்பு மிகுதியாகும் பணத்தில் 1மில்லியன் அதாவது 10 இலட்சம் ரூபாவினை மன்னார் நகரப்பகுதியில் மணிக்கூட்டுக்கோபுரம் கட்டப்படுவதற்கு ஒதுக்கப்படும் என கூறியிருந்தார்.
அவர் சொன்னபடியே பொதுமைதானமும் பொதுநூலகமும் அபிவிருத்திப்பணிகள் நடைபெற்று வருகின்றபோதும் எந்தவிதமான பணிகளும் மணிக்கூட்டுக்கோபுரம் கட்டுவதற்கான நடைபெறவில்லை மக்களின் கேள்விகளை நியூ மன்னார் இணையம் செயலாளர் அவர்களிடம் முன்வைத்தபோது…
நான் சொன்னபடியே அபிவிருத்திப்பணிகளை செய்து கொண்டுதானிருக்கிறேன் மணிக்கூட்டுக்கோபுரம் கட்டுவதற்காக அனுமதியினை எந்திரி.A-C-நிசாந்தன் பிரதம பொறியியலாளர் அலுவலகம் வீதி அபிவிருத்தி அதிகார சபை வவுனியா அவர்களிடம் கோரியிருந்தேன்.
எனது கோரிக்கையானது மறுக்கப்பட்டுள்ளது அதாவது மணிக்கூட்டுக்கோபுரம் கட்டுவதற்கு வடக்கு மாகாண பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுப்புக்கான காரணம் இதுதான் போக்குவரத்து ஓட்டுனர்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடைஞ்சல்கள் இடையூறுகள் ஏற்படுமாம்…
மன்னார் நகரப்பகுதியில் ரவுண்ட போட்டில் பெரிய வேப்ப மரம் உள்ளது அது இடைஞ்சல் இல்லையா…? நகரசபையினால் கட்டப்பட இருக்கும் மணிக்கூட்டுக்கோபுரமானது அதற்கு முன்னாள் 3 தூணில் தான் உயரமாக அமைக்கப்படுவதற்கான வரைபடத்தோடு தெளிவாக அனுப்ப பட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஏன் ஏனைய மாவட்டங்களில் நகரப்பகுதியில் மணிக்கூட்டுக்கோபுரம் இல்லையா…???
ஏன்…??? எமது மன்னார் மாவட்டத்தில் மட்டும் இவ்வாறான அபிவிருத்திப்பணிகள் செய்ய முற்பட்டாலும் திட்டம் வகுத்தாலும் தடையேற்படுகின்றது தடைசெய்யப்படுகின்றது.
மன்னாரின் பல அடையாளங்கள் அழிந்து கொண்டிருக்கும் தருவாயில் தற்போதுதான் மன்னாரை அழகுபடுத்தும் அபிவிருத்திப்பணிகளில் மணிக்கூட்டுக்கோபுரமும் பிரதானமானவையாகவும் மன்னாருக்குள் நுழையும் போது காட்சி தரும் அடையாளமாக அமையும்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சுக்கள் அனுமதி மறுப்பினை மீள்பரிசீலனை செய்து மாற்று திட்டத்தினை வகுத்து மன்னார் மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றுவதோடு மன்னார் அபிவிருத்தி அழகுற அமைய அனுமதி தந்து ஆவணசெய்யவேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளும் விருப்பமுமாகும்.
-மன்னார் எழுச்சியின் குரல்-

மன்னார் நகரப்பகுதியில் மணிக்கூட்டு கோபுரம் Clock Tower கட்ட அனுமதி மறுப்பு….மக்கள்…….கொதிப்பு
Reviewed by Author
on
July 17, 2016
Rating:

No comments:
Post a Comment