மன்னார் மறைசாட்சிகள் நினைவு விழாவை முன்னிட்டு இடம் பெற்ற கரப்பந்தாட்ட சுற்று-வெற்றி பெற்றது 'ஓலைத்தொடுவாய் சென் தோமஸ் அணி' -PHOTOS
ஆசிய நாடுகளில் முதல் மறைசாட்சிகளாகிய மன்னார் மறைசாட்சிகள் நினைவு விழா எதிர்வரும் 16 ஆம் திகதி அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையில் மன்னார் மறைசாட்சிகள் சமூக நல அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 9 ஆம்,10 ஆம் திகதிகளில் மன்னார் தோட்டவெளி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த 13 அணிகள் பங்கு பற்றினர்.
இறுதி போட்டியின் போது ஓலைத்தொடுவாய் சென்தோமஸ் அணியும் துள்ளுகுடியிருப்பு சென் மேரிஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
இறுதி போட்டியானது 5.3 என்ற அடிப்படையில் இடம் பெற்றது.
இதில் 3 சுற்றுக்களையூம் கைப்பற்றி 'ஓலைத்தொடுவாய் சென் தோமஸ் அணி' வெற்றி பெற்றது.
இரண்டு தினங்கள் இடம் பெற்ற இப்போட்டியின் போது சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரும் தோட்டவெளி பங்குத்தந்தை அருட்பணி இம்மனுவேல் செபமாலை அடிகளார், செபமாலை தாசர் சபையினை சேர்ந்த அருட்பணி நிமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மன்னார் மறைசாட்சிகள் சமூக நல அமைப்பின் தலைவர் சந்தியோகு , செயலாளர் தியோகுப்பிள்ளை, அமைப்பின் ஆய்வாளர் அந்தோனிப்பிச்சை அவர்களும் மற்றும் அமைப்பில் அங்கத்துவம் பெறும் 23 கிராமங்களை சேர்ந்த அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர் .
இப்போட்டிகளின் போது பிரதான நடுவராக அகில இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளன உறுப்பினரும் மத்தியஸ்தருமான பாலித பெரேரா , துனை நடுவராக நிஜாம் , மன்னார் மாவட்ட கரப்பந்தாட்ட தேசிய நடுவரும் உடற்கல்வி ஆசிரியருமான ஒகஸ்ரின் ஆகியோர்; கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறைசாட்சிகள் நினைவு விழாவை முன்னிட்டு இடம் பெற்ற கரப்பந்தாட்ட சுற்று-வெற்றி பெற்றது 'ஓலைத்தொடுவாய் சென் தோமஸ் அணி' -PHOTOS
Reviewed by NEWMANNAR
on
July 12, 2016
Rating:

No comments:
Post a Comment