அண்மைய செய்திகள்

recent
-

கொக்காவில் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இளம் தம்பத்தியர்கள் பலி.(Photos

வவுனியா யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளம் தம்பதியர்கள் இருவர் உயிரிழந்தள்ளதோடு,குழந்மை ஒன்று படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் வவுனியாவைச் சேர்ந்த அல்பட் ஜெயக்குமார்(வயது-24) மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவரது மனைவியான பிரஷாந்தினி(வயது-23) ஆகியோரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்,,,

வவுனியா யாழ்ப்பாணம் (ஏ-9 வீதி) கொக்காவில் பகுதியில்
இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக மினி பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

-இதன் போது மோட்டார் சைக்கிலில் பயணித்த இளம் தம்பதிகளான குடும்பஸ்தர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் அவர்களின் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறியரக மினி பஸ் சாரதியின் தூக்கத்தின் காரணத்தினால் குறித்த பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து, முன் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதின் காரணத்தினாலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறிய ரக பேருந்தின் சாரதி விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததனை அடுத்து குறித்த சாரதியை கிளிநொச்சி பொலிசார் மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





கொக்காவில் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இளம் தம்பத்தியர்கள் பலி.(Photos Reviewed by NEWMANNAR on July 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.