பிரபல பொப் பாடகியுடன் இணைந்து இரவு விடுதியில் கும்மாளம் போட்ட ரொனால்டோ...
ஐரோப்பிய கிண்ண கால்பந்து தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ரொனால்டோவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் தற்போது விடுமுறையில் இருக்கும் ரொனால்டோ பல்வேறு இடங்களுக்கு சென்று தனது ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகிறார்.
தற்போது அமெரிக்கா சென்றுள்ள ரொனால்டோ லாஸ் வேகசில் உள்ள பிரபல இரவு விடுதியில் பிரபல அமெரிக்க பொப் பாடகி ஜெனிபர் லோபஸ் உடன் இணைந்து கிளப்பை ஒரு கலக்கு கலக்கியுள்ளார். ஜெனிபர் லோபசின் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் ரொனால்டோ கலந்து கொண்டுள்ளார்.
காலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாகும் வரை அடுத்த மாதம் நடக்கவுள்ள போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பொப் பாடகியுடன் இணைந்து இரவு விடுதியில் கும்மாளம் போட்ட ரொனால்டோ...
Reviewed by Author
on
July 27, 2016
Rating:

No comments:
Post a Comment